Wednesday, July 1, 2015

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - தமிழின் தொன்மை மற்றும் கலைகள்




1. சங்ககாலம் முதல் தமிழகத்தின் நாணய வளர்ச்சியை எடுத்தியம்பும் நூல் - தமிழர் காசுஇயல்

2. தமிழின் தொன்மையைக் காட்டும் மிகச்சிறந்த சான்றுகளாக விளங்குவது எது - கடலாய்வுகள் வழியாகக் கண்டெடுக்கப் பெற்ற நாணயங்கள்

3. ரோமானிய நாட்டின் காசுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் கிடைத்து வருவதால், அவற்றின் காலளவு -------------------- அறிவிக்க உதவுகின்றன - தமிழின் தொன்மையை

4. சிந்து சமவெளி நாகரீகம் மூலம் அறியப்படும் கருத்து - திராவிடம்

5. ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற பகுதிகளில் காணக்கிடைக்கும் வரிவடிவங்கள் தமிழின் தொன்மை வடிவங்கள் என்று நிறுவியவர் - பின்லாந்து அறிஞர் பர்கோலா

6. தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலில் தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகளை விளக்கியவர் - . தட்சிணாமூர்த்தி

7. மாமல்லபுர நினைவுச் சின்னங்களை உலகப்பண்பாட்டுச் சின்னம் என்று ------------------. ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது - 1984

8. வீடுகள் அமைப்பதில் சில முறைகள் அக்காலத்தில் இருந்தன என்று கூறியவர் - டாக்டர் .வே.சாமிநாதையர்

9. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியக் கட்டடக் கலைஞர் - விட்ருவியஸ்

10. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலக் கலைத் திறனாய்வாளரான ஜான் ரஸ்கின் என்பவர் வெளியிட்ட நூல் - கட்டிடக்கலையின் ஏழு விளக்குகள்

11. 19-ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் - லூயிஸ் சலிவன்

12. தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு - சிலம்பம்

13. ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், எத்தனை வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன - 32

14. சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் என்று எந்த நூலில் கூறப்பட்டுள்ளது - பதார்த்த குண சிந்தாமணி

15. தெருக்கூத்து நடைபெறும் இடம் ............... எனப்படும் - களரி

No comments:

Post a Comment