Monday, March 30, 2015

SI - தேர்விற்கான புவியியல் வினா - விடை

பொது அறிவு - புவியியல்
1)       2010ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை அதிகம் உள்ள கண்டம் எது - ஆசியா
2)       முப்பந்தல் என்ற ஊர் எதற்கு புகழ்பெற்றது - காற்றாலை மின் உற்பத்தி
3)       ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலை எந்த நாட்டின் உதவியோடு இந்தியாவில் நிறுவப்பட்டது - ஜெர்மனி
4)       திருப்பூர் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது - நொய்யல்
5)       துர்காபூர் இரும்பு எஃகு தொழிற்சாலை எந்த நாட்டின் உதவியோடு இந்தியாவில் நிறுவப்பட்டது - இங்கிலாந்து
6)       2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எந்த மத மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர் - ஹிந்து
7)       இந்திய தொலைபேசி தொழிற்சாலை (ITI) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது - பெங்களூர்
8)       பிகானீர் நகரத்தை சுற்றிய பகுதிகளில் உள்ள காலநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது - வெப்ப பாலைவனம்
9)       இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக அளவு கரிசல் மண்ணை கொண்டுள்ளது - மகாராஷ்டிரா
10)   இந்தியா உலகில் 7வது பெரிய பரப்பளவு கொண்ட நாடு. அது உலகப் பரப்பில் எத்தனை விழுக்காடு கொண்டுள்ளது - 2.4%
11)   இந்தியாவில் காசி மலை எந்த மாநிலத்தில் காணப்படுகிறது - மேகாலயா
12)   மிளகாய் உற்பத்தியில் உலகில் முன்னிலையில் உள்ள நாடு - இந்தியா
13)   உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படுவது எது - கியுபா
14)   இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை எது - மெரீனா கடற்கரை
15)   தமிழகக் கடற்கரையின் மொத்த நீளம் - 1076 கி.மீ.

பொது அறிவு - இயற்பியல்

1. கடலின் ஆழத்தை கண்டறிய உதவும் கருவி - சோனோ மீட்டர்
2. எக்ஸ் கதிர்கள், காமாக் கதிர்கள், ஆல்பா மற்றும் பீட்டா கதிர்கள் ஆனது ----------- வகை கதிர்வீச்சு - அயனி கதிர்வீச்சு
3. மின்னோட்டத்தை அளக்க உதவும் கருவி - அம்மீட்டர்
4. நீர் திவலைகள் கோள வடிவமாக இருக்கக் காரணம் - பரப்பு இழுவிசை
5. மீயொலி அலைகளின் அதிர்வு எண் - 20 KHZ-க்கு அதிகம்
6. ஒரு பொருளின் வேகம் இரட்டிப்பாகும்போது அதன் இயக்க ஆற்றல் - நான்கு மடங்காகும்
7. ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் செல்லும்போது அதன் வேக வளர்ச்சி - பூஜ்ஜியம்
8. டைனமோவின் தத்துவத்தை கண்டறிந்தவர் - மைக்கேல் ஃபாரடே
9. பனிக்கட்டியுடன் சாதாரண உப்பு கலக்கப்படும்போது அதன் உருகுநிலை - குறையும்
10. எந்த அலைக் கதிர்கள் அணுவில் அணுக்கரு மாற்றம் ஏற்படும்போது உற்பத்தியாகின்றன - காமா கதிர்கள்
11. ஒலி அதிவேகமாக செல்லக்கூடிய பொருள் - எஃகு
12. கெல்வின் அளவு முறையில் மனித உடம்பின் சராசரி வெப்ப நிலை - 310 கெல்வின்
13. 100 வாட் மின்சார விளக்கு ஒன்று, ஓர் அலகு மின்சார ஆற்றலை நுகர்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் - 10 மணி
14. ஜெர்மானியத்துடன் சிறிதளவு ஆன்டிமனியைச் சேர்த்தால் கிடைப்பது - n-வகை குறைக் கடத்தி

15. படிகங்களின் கோணங்களை அளவிடும் கருவி - கோனியோ மீட்டர்

Friday, March 27, 2015

SI தேர்விற்கான - பொது அறிவு


1. தங்கப் போர்வை நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது - ஆஸ்திரேலியா

2. மாலைக்கண் நோய் ஏற்படுவதற்கு காரணம் - வைட்டமின் குறைபாடு

3. அம்மான் எந்த நாட்டின் தலைநகரம் - ஜோர்டான்

4. மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது - மைசூர்

5. ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய மூன்று ஆறுகள் பாயும் மாநிலம் எது - பஞ்சாப்

6. உடலில் நீண்ட தசை எங்குள்ளது - தொடை

7. உலக சுகாதார தினம் கொண்டாடப்படும் நாள் - ஏப்ரல் 7

8. இந்தியாவில் முதன்முதலில் பக்தி இயக்கத்தை தோற்றுவித்தவர் - ராமானுஜர்

9. இந்திய விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்படும் நாள் - டிசம்பர் 23

10. தேசிய சின்னமாக அசோக சக்கரம் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது - ஜனவாp 26

11. நன்னூல் எந்த வகையைச் சார்ந்தது - இலக்கண நூல்

12. எதிர்பாராத முத்தம் என்ற நூலின் ஆசிhpயர் - பாரதிதாசன்

13. கர்நாடக இசையின் தந்தை எனப்படுபவர் - புரந்தரதாசர்

14. குச்சிப்புடி நடனத்தின் மற்றொரு பெயர் - பாகவத மேளா நாடகம்


15. உலகின் முதல் அணுக்கரு உலை எங்கு ஏற்படுத்தப்பட்டது - சிக்காகோ