Thursday, April 30, 2015

SI - தேர்விற்கான வினா - விடை - உளவியல்

1.       முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 3x+50, x+200, x+250 எனில் ஒவ்வொரு கோணத்தின் அளவையும் காண்க.
விடை: 830, 460 மற்றும் 510
விளக்கம்:
முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180
(3x+50) + (x+200) + (x+250) = 1800
5x + 500 = 180 0
5x = 1300
X = 260
3x+50 = (3 * 260) + 50 = 830
x+200 = 260 + 200 = 460
x+250 = 260 + 250 = 510
ஃ முக்கோணத்தின் மூன்று கோணங்களின் அளவுகள் 830, 460 மற்றும் 510


2.   பின்வரும் விவரங்களுக்கு முகடு காண்க.
2, 2, 2, 3, 3, 4, 5, 5, 5, 6, 6, 8
விடை: 2 மற்றும் 5
விளக்கம்:
2, 5 ஆகிய எண்கள் தலா மூன்று முறை வந்துள்ளன. ஆகவே, விவரங்களுக்கு 2 மற்றும் 5 ஆகிய இரண்டுமே முகடுகளாகும்.

3.   ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 120. அதே செய்தி ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால், புத்தகத்தின் மொத்த பக்கங்கள் எவ்வளவாக இருக்கும்?
விடை: 175
விளக்கம்:
35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 120 ஆகும்.
எனவே, 24 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை = (35/24) * 120
= 35 * 5
= 175
ஃ ஒரு பக்கத்தில் 24 வரிகள் இருக்கும் பொழுது, புத்தகத்தின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 175 .

4.   ஒரு நபர் ஒரு பழைய மிதிவண்டியை ரூ. 1250 க்கு வாங்கினார். அதனை சீர்ப்படுத்த ரூ. 250 செலவு செய்தார். அவர், அதனை ரூ. 1400 க்கு விற்றார். அவரின் இலாப அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க.
விடை: நட்ட சதவீதம் 6.67%
விளக்கம்:
மிதிவண்டியின் அடக்கவிலை = ரூ. 1250
சீர்படுத்த ஆன செலவு = ரூ. 250
மொத்த அடக்கவிலை = 1250 + 250 = ரூ. 1500
விற்பனை விலை = ரூ. 1400
நட்டம் = அடக்கவிலை – விற்பனை விலை
= 1500 – 1400 = 100
நட்ட சதவீதம் = (நட்டம்/அடக்கவிலை) * 100
= (100/1500) * 100 = 20/3
= 6 2/3 (அல்லது) 6.67
எனவே, நட்டம் = ரூ. 100, நட்ட சதவீதம் = 6.67%

5.   ஒரு நாற்கரத்தின் பரப்பளவு 525 ச.மீ. அதன் இரு உச்சிகளிலிருந்து மூலைவிட்டத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளங்கள் 15 மீ, 20 மீ எனில் மூலைவிட்டத்தின் நீளமென்ன?
விடை: 30 மீ.
விளக்கம்:
வினாவில்,
பரப்பளவு = 525 ச.மீ, h1 = 15 மீ, h2 = 20 மீ எனத் தரப்பட்டுள்ளது.
இப்பொழுது,
நாற்கரத்தின் பரப்பளவு = 525 ச.மீ
(1/2) * d * (h1 + h2) = 525
(1/2) * d * (15 + 20) = 525
(1/2) * d * 35 = 525
d = (525 * 2)/35 = 1050/35 = 30 மீ
ஃ மூலைவிட்டத்தின் நீளம் = 30 மீ.


பொதுத்தமிழ்


1. திருமுறைகளுள் பழமையானது எது - திருமந்திரம்

2. பன்மொழிப் புலவர் என்று அழைக்கப்படுபவர் - கா.அப்பாத்துரை

3. தமிழ் வேதம் என்று போற்றப்படும் நூல் - திருமந்திரம்

4. ஆண்டு - என்ற சொல்லின் பெயர்ச்சொல் தருக - காலப்பெயர்

5. நெடுநீர் - என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக - பண்புத்தொகை

6. இனியவை நாற்பது என்ற நூலின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்

7. RENEWAL - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் - புதுப்பித்தல்

8. இலை - என்ற சொல்லின் பெயர்ச்சொல் தருக - சினைப்பெயர்

9. கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு

10. தென்னாடு உடைய சிவனே போற்றி என்ற தொடரைக் குறிக்கும் சான்றோர் - திருமூலர்

11. அறி - என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை எழுதுக - அறிதல்

12. இன்னாச்சொல் - என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

13. மூவேந்தரின் சிறப்பை விளக்கும் நூல் - முத்தொள்ளாயிரம்

14. துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக் கூறும் நூல் - இன்னா நாற்பது


15. இரங்கல் - என்ற சொல்லின் பெயர்ச்சொல் தருக - தொழிற்பெயர்

Wednesday, April 29, 2015

SI - தேர்விற்கான வினா விடை - உளவியல்

1. ஒரு பள்ளியின் இறுதி வகுப்பில் படிக்கும் 240 மாணவர்களில், 180 பேர் தேர்வில் தேர்ச்சியடைந்தனர். தேறியவர்களின் சதவீதம் என்ன?
விடை: 75%
விளக்கம்:
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 240
தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களின் எண்ணிக்ககை 180
தேறியவர்களின் சதவீதம் = (180/240) * 100
= (3/4) * 100
= 75%

2. ஒரு எண்ணின் மூன்று மடங்கு 60 எனில், அந்த எண் என்ன?
விடை: 20
விளக்கம்:
கணக்கிடவேண்டிய எண்ணை X என எடுத்துக்கொள்க.
வினாவின்படி,
3X = 60
X = 60/3
X = 20

3. ஐந்து பேனாக்களின் விலை ரூ.75 எனில், 8 பேனாக்களின் விலை என்ன?
விடை: 120
விளக்கம்:
ஐந்து பேனாக்களின் விலை = ரூ.75
ஒரு பேனாவின் விலை = 75/5
= 15
8 பேனாக்களின் விலை = 15 * 8
= 120

4. ஒரு எண்ணின் 5 மடங்குடன் 5-ஐ கூட்ட கிடைப்பது 55 எனில், அந்த எண்  என்ன?
விடை: 10
விளக்கம்:
கணக்கிடவேண்டிய எண்ணை X என எடுத்துக்கொள்க.
வினாவின்படி,
5X + 5 = 55
5X = 55 – 5
5X = 50
X = 50/5
X = 10

5. 80 கி.மீ. வேகத்தில் காரில் செல்லும் ஒருவர் இடத்தை அடைய 6 மணி நேரம் ஆகிறது. அவர் 60 கி.மீ. வேகத்தில் சென்றால் எவ்வளவு  நேரமாகும்?
விடை: 8 மணி நேரம்
விளக்கம்:
தொலைவு = வேகம் * எடுத்துக்கொண்ட நேரம்
= 80 * 6
= 480 கி.மீ.
எனவே, 60 கி.மீ. வேகத்தில் செல்ல எடுத்துக்கொண்ட நேரம் = தொலைவு / வேகம்
= 480 / 60
= 8 மணி நேரம்



பொது அறிவு


1. காற்றின் திசைவேகம் காணப் பயன்படுவது - அனிமோ மீட்டர்

2. வளிமண்டல அழுத்தம் காணப் பயன்படுவது - பாரோ மீட்டர்

3. ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோஸ்கோப்

4. மாலிமிகள் திசையை அறியப் பயன்படுவது - காம்பஸ்

5. தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும், தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலிபிரிண்டர்

6. எதிரில் வரும் விமானத்தை அறியப் பயன்படுவது - ரேடார்

7. இதயதுடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காணப் பயன்படுவது - ஸ்டெதஸ்கோப்

8. நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்கப் பயன்படுவது - மைக்ரோஸ்கோப்

9. தூரத்திலுள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படுவது - டெலஸ்கோப்

10. காந்தப் புலங்களை அறியப் பயன்படுவது - மாக்னடோ மீட்டர்

11. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்கப் பயன்படுவது - குரோனோமீட்டர்

12. மனித உடலின் உள் உறுப்புகளைக் காணப் பயன்படுவது - எண்டோஸ்கோப்

13. கடல் மட்டத்திலிருந்து உயரம் காணப் பயன்படுவது - ஆல்டி மீட்டர்

14. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறியப் பயன்படுவது - ஹிமோசைட்டோ மீட்டர்


15. மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறியப் பயன்படுவது - பைரோ மீட்டர்

Tuesday, April 28, 2015

SI - தேர்விற்கான வினா - விடை - உளவியல்

1.   ORUY என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை ஒரு எழுத்து மீண்டும் வராதபடி, எத்தனை அர்த்தமுள்ள வார்த்தைகளை எழுத முடியும்?
விடை: 3
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள ORUY என்ற வார்த்தையைக் கொண்டு ஒரு எழுத்து கூட மீண்டும் வராதபடி YOUR, OUR, OR ஆகிய அர்த்தமுள்ள வார்த்தைகளை நம்மால் எழுத முடியும்.

2.   ஒரு வகையான மொழிக் குறியீட்டில் Read a Paper என்பது 817 என குறிக்கப்படுகிறது. Thinking and writing என்பது 624 எனவும், Paper and Pen என்பது 723 எனவும் குறிக்கப்பட்டால், Paper என்பதை மட்டும் குறிக்கும் எண் எது?
விடை: 7
விளக்கம்:
Paper எனும் சொல் வரும் தொகுப்புகள் Read a Paper மற்றும் Paper and Pen. இவ்விரண்டு தொகுப்புகளின் குறியீடு 817 மற்றும் 723.
குறியீடுகளில் பொதுவாக உள்ள எண் 7. எனவே, Paper என்பதை மட்டும் குறிக்கும் எண் 7 ஆகும்.


3.   சரியான விடையை எழுதவும்.
9 : 49 : : 25 : ?
விடை : 81
விளக்கம்:
தரப்பட்டுள்ள தொகுப்பில் உள்ள 9, 49 ஆகியவை 3 மற்றும் 7 இன் வர்க்கமாகும். அதைப்போல விடுபட்ட எண் தொகுப்பில் வரும் 25 என்ற எண் 5 வர்க்கமாகும். எனவே, விடுபட்ட எண்ணானது 9 இன் வர்க்கமாகவே இருக்க வேண்டும்.
அதாவது 9 à 32 = 9
49 à 72 = 49
25 à 52 = 25
ஆக விடுபட்ட எண் 92 = 81

4.   இங்கு A என்பது கழித்தல் ஆனால், B என்பது கூட்டல் ஆனால், C என்பது பெருக்கல் ஆனால், N என்பது வகுத்தல் ஆனால், பின்னர்
15B9A15C10N5 இன் மதிப்பு என்ன?
விடை: -6
விளக்கம்:
BODMAS என்ற விதிப்படி, பொதுவாக வகுத்தல், பெருக்கல், கூட்டல், கழித்தல் என்ற முறையிலேயே கணக்கிட வேண்டும்.
ஆக 15B9A15C10N5 என்பது குறிப்புகளின்படி, 15 + 9 – 15 * 10 / 5 என வரும்.
15 + 9 – 15 * 10 / 5 = 15 + 9 – 15 * 2
= 15 + 9 – 30
= 24 – 30
= -6
எனவே, 15B9A15C10N5 இன் மதிப்பு -6 ஆகும்.

5.   ஒரு வகையான மொழிக் குறியீட்டில் Two girls danced என்பது ztk pvg min எனவும், girls are winners என்பது pvg rar ghj எனவும் குறிக்கப்பட்டால், winners என்பதை மட்டும் குறிக்கும் குறியீடு எது?
விடை: rar அல்லது ghj
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள Two girls danced மற்றும் girls are winners இல் பொதுவாக வரும் சொல் girls ஆகும். ஆக அவற்றின் குறியீடுகளான ztk pvg min மற்றும் pvg rar ghj இல் வரும் pvg எனும் குறியீடு girls ஐ குறிக்கும்.
எனவே, கேட்கப்பட்டுள்ள winners எனும் சொல் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில் பொதுவாக வரவில்லை. ஆக girls are winners என்ற தொகுப்பின் குறியீடான pvg rar ghj இல் வரும் rar, ghj இல் ஏதேனும் ஒன்று winners என்ற சொல்லை குறிக்கும்.




பொது அறிவு


1. கரையான் ஒரு நாளைக்கு எவ்வளவு முட்டை இடும் - முப்பதாயிரம் (30,000)

2. ..சிதம்பரனாரின் படைப்பு எது - மெய்யறிவு

3. ரப்பரை பதனிடுவதற்காக பயன்படும் தனிமம் எது - சல்பர்

4. கஜுராஹோவில் பிரம்மாண்டமான கோயில்களை கட்டியவர்கள் - சந்தேலர்கள்

5. சூரியக் கடவுள் ஆலயம் அமைந்துள்ள இடம் - கொனாரக்

6. ஸ்தம்பம் எனப்படுவது - வெற்றிக் கோபுரம்

7. கார்ல்மார்க்ஸ் எழுதிய நூல் பெயர் - டாஸ் கேப்பிடல்

8. காந்தாரக் கலைக்கு ஆதரவு அளித்த முகலாய மன்னர் - அக்பர்

9. அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் - கௌடில்யர்

10. பழங்காலத்தில் விதர்ப்ப தேசம் என்று அழைக்கப்பட்ட மாநிலம் எது - பீகார்

11. செங்கிஸ்கான் எந்த நாட்டைச் சார்ந்தவர் - மங்கோலியா

12. தபால் தலையை வட்ட வடிவமாக வெளியிட்டுள்ள நாடு - மலேசியா

13. மத்தியில் முதலாவது கூட்டணி அரசை உருவாக்கியவர் - மொரார்ஜி தேசாய்

14. தமிழக சட்டசபை உருவாக்கப்பட்ட ஆண்டு - 1937


15. புகழ் பெற்ற அமர்நாத் குகை எங்குள்ளது - காஷ்மீர்