Monday, April 27, 2015

SI - தேர்விற்கான உளவியல் வினா - விடை


1.       ஒரு  வகுப்பில் சந்திரன் என்ற மாணவன் மேலிருந்து 7வதாகவும், கீழிருந்து 26வதாகவும் இருந்தால் வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
விடை : 32
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ளதாவது, சந்திரன் மேலிருந்து 7வது இடத்தில் உள்ளார் எனில் அவருக்கு முன் 6 பேர் உள்ளனர்.
சந்திரன் கீழிருந்து  26 வது இடத்தில் உள்ளார் எனில் அவருக்கு பின் 25 பேர் உள்ளனர்.
சந்திரனைத் தவிர்த்து வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை = 6 + 25
= 31
எனவே, சந்திரனையும் சேர்த்து வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 31 + 1 = 32

2.   நேற்று முன்தினத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை எனில், நாளை மறுதினத்துக்கு 2 நாட்களுக்குப் பின்பு எந்த கிழமை வரும்?
விடை: திங்கள்
விளக்கம்:
நேற்று முன்தினத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு எனில் 4 நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை என கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று வியாழக்கிழமை ஆகும்.
நாளை மறுதினத்துக்கு 2 நாட்களுக்குப் பின்பு எனில் 4 நாட்கள் கழித்து ஆகும். ஆக வியாழக்கிழமைக்கு அடுத்த 4 நாள் திங்கட்கிழமையாகும்.

3.   49 பேர் கொண்ட ஒரு வகுப்பில் ஸ்வர்ணா என்ற மாணவி 19வது ரேங்க் எனில், கடைசியிலிருந்து ஸ்வர்ணாவின் ரேங்க் என்ன?
விடை: 31
விளக்கம்:
வகுப்பிலுள்ள மொத்த மாணவர்கள் = 49
ஸ்வர்ணாவின் ரேங்க் = 19
ரேங்கில் ஸ்வர்ணாவுக்கு பின் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 49 – 19 = 30
எனவே, கடைசியிலிருந்து ஸ்வர்ணாவின் ரேங்க் 31 ஆகும்.

4.   ஆக்ஸிஜன் : எரிதல் : காரியமிலவாயு : ?
விடை: தீ அணைப்பான்
விளக்கம்:
ஆக்ஸிஜன் தீ எரிய உபயோகப்படும். காரியமிலவாயு தீயை அணைப்பதற்கு உபயோகப்படும்.


5.   2*3 = 36, 5*4 = 400, 6 * 2 = 144, 3 * 3 = 81 எனில், 5 * 5 என்பதற்கு சரியான  விடையை எழுதுக.
விடை: 625
விளக்கம்:
இங்கு ஒவ்வொரு சமன்பாட்டிலும், கொடுக்கப்பட்ட இரண்டு எண்களைக் பெருக்கி அதில் வரும் எண்ணுடைய வர்க்கமே விடையாக தரப்பட்டுள்ளது.
அதாவது,
2*3 இல் 2 * 3 = 6 => 62 = 6 * 6 = 36
5*4 இல் 5 * 4 = 20 => 202 = 20 * 20 = 400
6*2 இல் 6 * 2 = 12 => 122 = 12 * 12 = 144
3*3 இல் 3 * 3 = 9 => 92 = 9 * 9 = 81
இதைப் போல 5 * 5 இல் 5 * 5 = 25 => 252 = 25 * 25 = 625

எனவே, 5 * 5 என்பதற்கு 625 என்பது விடையாகும்.

No comments:

Post a Comment