Thursday, April 30, 2015

SI - தேர்விற்கான வினா - விடை - உளவியல்

1.       முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 3x+50, x+200, x+250 எனில் ஒவ்வொரு கோணத்தின் அளவையும் காண்க.
விடை: 830, 460 மற்றும் 510
விளக்கம்:
முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180
(3x+50) + (x+200) + (x+250) = 1800
5x + 500 = 180 0
5x = 1300
X = 260
3x+50 = (3 * 260) + 50 = 830
x+200 = 260 + 200 = 460
x+250 = 260 + 250 = 510
ஃ முக்கோணத்தின் மூன்று கோணங்களின் அளவுகள் 830, 460 மற்றும் 510


2.   பின்வரும் விவரங்களுக்கு முகடு காண்க.
2, 2, 2, 3, 3, 4, 5, 5, 5, 6, 6, 8
விடை: 2 மற்றும் 5
விளக்கம்:
2, 5 ஆகிய எண்கள் தலா மூன்று முறை வந்துள்ளன. ஆகவே, விவரங்களுக்கு 2 மற்றும் 5 ஆகிய இரண்டுமே முகடுகளாகும்.

3.   ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 120. அதே செய்தி ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால், புத்தகத்தின் மொத்த பக்கங்கள் எவ்வளவாக இருக்கும்?
விடை: 175
விளக்கம்:
35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 120 ஆகும்.
எனவே, 24 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை = (35/24) * 120
= 35 * 5
= 175
ஃ ஒரு பக்கத்தில் 24 வரிகள் இருக்கும் பொழுது, புத்தகத்தின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 175 .

4.   ஒரு நபர் ஒரு பழைய மிதிவண்டியை ரூ. 1250 க்கு வாங்கினார். அதனை சீர்ப்படுத்த ரூ. 250 செலவு செய்தார். அவர், அதனை ரூ. 1400 க்கு விற்றார். அவரின் இலாப அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க.
விடை: நட்ட சதவீதம் 6.67%
விளக்கம்:
மிதிவண்டியின் அடக்கவிலை = ரூ. 1250
சீர்படுத்த ஆன செலவு = ரூ. 250
மொத்த அடக்கவிலை = 1250 + 250 = ரூ. 1500
விற்பனை விலை = ரூ. 1400
நட்டம் = அடக்கவிலை – விற்பனை விலை
= 1500 – 1400 = 100
நட்ட சதவீதம் = (நட்டம்/அடக்கவிலை) * 100
= (100/1500) * 100 = 20/3
= 6 2/3 (அல்லது) 6.67
எனவே, நட்டம் = ரூ. 100, நட்ட சதவீதம் = 6.67%

5.   ஒரு நாற்கரத்தின் பரப்பளவு 525 ச.மீ. அதன் இரு உச்சிகளிலிருந்து மூலைவிட்டத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளங்கள் 15 மீ, 20 மீ எனில் மூலைவிட்டத்தின் நீளமென்ன?
விடை: 30 மீ.
விளக்கம்:
வினாவில்,
பரப்பளவு = 525 ச.மீ, h1 = 15 மீ, h2 = 20 மீ எனத் தரப்பட்டுள்ளது.
இப்பொழுது,
நாற்கரத்தின் பரப்பளவு = 525 ச.மீ
(1/2) * d * (h1 + h2) = 525
(1/2) * d * (15 + 20) = 525
(1/2) * d * 35 = 525
d = (525 * 2)/35 = 1050/35 = 30 மீ
ஃ மூலைவிட்டத்தின் நீளம் = 30 மீ.


No comments:

Post a Comment