Wednesday, April 29, 2015

SI - தேர்விற்கான வினா விடை - உளவியல்

1. ஒரு பள்ளியின் இறுதி வகுப்பில் படிக்கும் 240 மாணவர்களில், 180 பேர் தேர்வில் தேர்ச்சியடைந்தனர். தேறியவர்களின் சதவீதம் என்ன?
விடை: 75%
விளக்கம்:
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 240
தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களின் எண்ணிக்ககை 180
தேறியவர்களின் சதவீதம் = (180/240) * 100
= (3/4) * 100
= 75%

2. ஒரு எண்ணின் மூன்று மடங்கு 60 எனில், அந்த எண் என்ன?
விடை: 20
விளக்கம்:
கணக்கிடவேண்டிய எண்ணை X என எடுத்துக்கொள்க.
வினாவின்படி,
3X = 60
X = 60/3
X = 20

3. ஐந்து பேனாக்களின் விலை ரூ.75 எனில், 8 பேனாக்களின் விலை என்ன?
விடை: 120
விளக்கம்:
ஐந்து பேனாக்களின் விலை = ரூ.75
ஒரு பேனாவின் விலை = 75/5
= 15
8 பேனாக்களின் விலை = 15 * 8
= 120

4. ஒரு எண்ணின் 5 மடங்குடன் 5-ஐ கூட்ட கிடைப்பது 55 எனில், அந்த எண்  என்ன?
விடை: 10
விளக்கம்:
கணக்கிடவேண்டிய எண்ணை X என எடுத்துக்கொள்க.
வினாவின்படி,
5X + 5 = 55
5X = 55 – 5
5X = 50
X = 50/5
X = 10

5. 80 கி.மீ. வேகத்தில் காரில் செல்லும் ஒருவர் இடத்தை அடைய 6 மணி நேரம் ஆகிறது. அவர் 60 கி.மீ. வேகத்தில் சென்றால் எவ்வளவு  நேரமாகும்?
விடை: 8 மணி நேரம்
விளக்கம்:
தொலைவு = வேகம் * எடுத்துக்கொண்ட நேரம்
= 80 * 6
= 480 கி.மீ.
எனவே, 60 கி.மீ. வேகத்தில் செல்ல எடுத்துக்கொண்ட நேரம் = தொலைவு / வேகம்
= 480 / 60
= 8 மணி நேரம்



No comments:

Post a Comment