Wednesday, June 10, 2015

பொது அறிவு - தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்


1. இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை - 118

2. புவியில் மிக அதிகளவில் உள்ள தனிமம் - ஆக்ஸிஜன்

3. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் - மெர்குரி

4. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் - புரோமின்

5. அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள் - ஹைட்ரஜன், ஹீலியம்

6. அதிக உருகுநிலை கொண்ட உலோகம் - டங்ஸ்டன்

7. முதன்முதலில் தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர் - லவாய்சியர்

8. ஆகாய விமானசாதனங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகம் - டியூராலுமின்

9. இரும்பை கால்வனைசிங் செய்ய பயன்படும் உலோகம் - சிங்க்

10. சோடியம் குளோரைடு, கால்சியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு போன்றவை எதற்கான உதாரணம் - அயனிச் சேர்மங்கள்

11. அயனிச் சேர்மங்களின் பொதுவான குணம் ஒன்று - நீரில் எளிதில் கரையும்

12. பெரும்பாலான சகபிணைப்புச் சேர்மங்கள் எந்நிலையில் இருக்கின்றன - வாயுக்களாகவோ, திரவங்களாகவோ உள்ளன.

13. சகபிணைப்புச் சேர்மங்கள் எதில் நன்கு கரையும் - பென்சீன், கார்பன் டெட்ரா குளோரைடு, ஈதர்.

14. சோப்பு தயாரிக்கும் தொழிலில் அதிகம் பயன்படும் சேர்மம் எது - சோடியம் ஹைட்ராக்ஸைடு


15. தனித்த நிலையிலும் சேர்மங்களாக உள்ள அலோகங்கள் - நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன் மற்றும் சல்பர்.

No comments:

Post a Comment