Friday, June 19, 2015

பொது அறிவு - பொது அறிவியல் விதிகள்-2


1. பெரிஸ்கோப் மற்றும் கிளைடாஸ்கோப் போன்றவற்றில் பயன்படும் தத்துவம் எது - பன்முக எதிரொளிப்பு தத்துவம்

2. வானம் நீலநிறமாகத் தோன்றக் காரணம் - ஒளிச்சிதறல்

3. முதல் நவீன வேதியியலறிஞர் என்று புகழப்பட்டவர் - இராபர்ட் பாயில்

4. ஒரு பொருளின் நிறை () மற்றும் அதன் திசைவேகம் () ஆகியவற்றின் பெருக்கற்பலன் - உந்தம்

5. மின்னோட்டத்தினை அளக்க உதவும் கருவியான டேன்ஜன்ட் கால்வனா மீட்டர் எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது. - டேன்ஜன்ட் விதி

6. ப்ளெமிங்கின் வலதுகை விதி ---------------- எனவும் அழைக்கப்படுகிறது - மின்னியற்றி விதி

7. டேன்ஜன்ட் கால்வனா மீட்டரின் சுருக்கக் கூற்றெண் --------- ஆகும். - K = (2aBh) / µ0n
8. திருகு செயல்படுதல், கதவு சுழலுதல் போன்றவை எதன் அடிப்படையில் செயல்படுகிறது - விசையின் திருப்புத்திறன்

9. புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் - சர் ஐசக் நியூட்டன்

10. பொருளொன்றின் வழியே ஒற்றை நிற ஒளி செல்லும்போது சிதறலடைகிறது எனவும், சிதறலடைந்த ஒளி படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமில்லாமல் புதிய அதிர்வெண்ணையும் கொண்டுள்ளது என விளக்கும் இராமன் விளைவை கண்டறிந்தவர் - சர் சி.வி. இராமன்

11. லென்ஸ் விதி --------------- விதியின் அடிப்படையில் செயல்படுகிறது - ஆற்றல் அழிவின்மை விதி

12. மிதிவண்டியில் வளைவான பாதயில் திரும்பும் போது உடல் உட்புறமாக சாய்ப்பது எந்த விசைக்கு எடுத்துக்காட்டு - மைய விலக்கு விசை

13. எலக்ட்ரான்கள் அணுக்கருவை வட்டப்பாதையில் சுற்றிவருவது -------- இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - வட்ட இயக்கம்

14. பொருள்கள் திசைமாறாமல் தொடர்ந்து ஒரே திசையில் நேர்கோட்டில் இயங்குதல் ------------- இயக்கமாகும் - நேர்க்கோட்டு இயக்கம்


15. ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் போது தனது நேர்கோட்டுப் பாதையை விட்டு விலகிச் செல்லும் பண்பு ---- எனப்படும். - ஒளிவிலகல்

No comments:

Post a Comment