Wednesday, June 17, 2015

பொது அறிவு - பொது அறிவியல் விதிகள்


 1. கோள்கள் சூரியனைச் சுற்றி இயங்கும் போது கோள்களுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட ஈர்ப்பியல் விசை ------------ ஆக செயல்படுகின்றது. - மையநோக்கு விசை

2. மைய நோக்கு விசையின் மதிப்பிற்கு சமமாகவும், எதிர் திசையிலும் அமையும் விசை -------- எனப்படும். - மைய விலக்கு விசை

3. தயிர் கடையும் போது வெண்ணெய் பாத்திரத்தின் ஓரத்திற்கு செல்வது எந்த விசைக்கு எடுத்துக்காட்டு - மைய விலக்கு விசை

4. மழைத் துளிகள் கோள வடிவில் இருக்கக் காரணம் - பரப்பு இழுவிசை

5. இயற்கை தேர்வுக் கோட்பாட்டை உருவாக்கியவர் - சார்லஸ் டார்வின்

6. மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கண்டறிந்தவர் - ஒயர்ஸ்டெட்

7. மின்காந்த தூண்டலை கண்டறிந்தவர் - பாரடே

8. நீர் அழுத்த பம்பு  (hydraulic pressure pump)  ----------- விதியின் அடிப்படையில் இயக்குகிறது. - பாஸ்கல்

9. கப்பல் மிதப்பதை விளக்குவது - ஆர்க்கிமிடிஸ் கோட்பாடு

10. மின்னோட்டத்துக்கும் மின் அழுத்த வேறுபாட்டுக்கும் உள்ள தொடர்பை விளக்குவது - ஓமின் விதி

11. விமானம் புறப்படுவதை விளக்குவது - பெர்னோலியின் தத்துவம்

12. நியூட்டனின் முதல் விதியை ----------- எனவும் அழைக்கலாம். - நிலைம விதி அல்லது சடத்துவ விதி

13. ஒரு துப்பாக்கியியிலிருந்து வரும் குண்டின் இயக்கம் - நேர்க்கோட்டு இயக்கம்

14. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர் - கிறிஸ்டியன் டாப்ளர்


15. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர் - சுற்றுப்பாதைகளின் விதி

No comments:

Post a Comment