Friday, June 12, 2015

பொதுத்தமிழ் - ந.பிச்சமூர்த்தி


 1. .பிச்சமூர்த்தி பிறந்த ஆண்டு - 8 நவம்பர் 1900

2. புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுபவர் - பிச்சமூர்த்தி

3. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் - .பிச்சமூர்த்தி

4. .பிச்சமூர்த்தி பிறந்த ஊர் - கும்பகோணம்

5. .பிச்சமூர்த்தியின் பெற்றோர் - நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள்

6. .பிச்சமூர்த்தி வழக்கறிஞராகப் பணிபுரிந்த காலம் - 1925 - 1938

7. இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த காலம் - 1939 - 1959

8. .பிச்சமூர்த்தியின் சிறுகதைகளுக்கு எடுத்துக்காட்டு - பதினெட்டாம்பெருக்கு, மோகினி, விஜயதசமி

9. பிச்சமூர்த்திக்கு பெற்றோர் இட்ட பெயர் - வேங்கட மகாலிங்கம்

10. .பிச்சமூர்த்தி ---------- என்ற பெண்ணை 1925ஆம் ஆண்டு மணந்தார் - சாரதா

11. .பிச்சமூர்த்தி தன்னை துறவியாக்க வேண்டி, தனக்கு உபதேசம் செய்யுமாறு யார் யாரிடம் அணுகினார் - ரமண மகரிஷியிடமும், சித்தர் குழந்தைசாமியிடமும்

12. .பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை 1934 ஆம் ஆண்டு காதல் என்ற தலைப்பில் -------- இதழில் வெளியானது - மணிக்கொடி

13. தமிழிலக்கிய உலகத்தில் பரவலான அறிமுகத்தைப் பிச்சமூர்த்திக்குப் பெற்றுத் தந்தது ---------- என்ற சிறுகதை ஆகும் - முள்ளும் ரோஜாவும்

14. எந்த புதுக்கவிதையைப் படைத்ததன் வாயிலாகத் தமிழ்ப் புதுக்கவிதை உலகின் தந்தை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார் - பெட்டிக்கடை நாராணன்


15. .பிச்சமூர்த்தி இறந்த ஆண்டு - 1976 டிசம்பர் 4

1 comment:

  1. புதுக்கவிதையின் தந்தை யார்?

    ReplyDelete