Thursday, June 4, 2015

பொதுத்தமிழ் - நாமக்கல் கவிஞர்


1. நாமக்கல் கவிஞரின் காலம் - 19.10.1888 - 24.8.1972 (அகவை 83)

2. நாமக்கல் கவிஞரின் பெற்றோர் - வெங்கடராமன் - அம்மணியம்மாள்

3. தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் பதவி வகித்தவர் - நாமக்கல் கவிஞர்

4. நாமக்கல் கவிஞரின் கவிதை நூல்களுக்கு எடுத்துக்காட்டு - பிரார்த்தனை (1938), தமிழன் இதயம் (1942), சங்கொலி (1953), கவிதாஞ்சலி (1953)

5. நாமக்கல் கவிஞரின் உரைநடைநூல்களுக்கு எடுத்துக்காட்டு - இசைத்தமிழ் (1965), கவிஞன் குரல் (1953), கம்பன் கவிதை இன்பக் குவியல்

6. காந்தியக்கவிஞர், ஆஸ்தானக்கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்டவர் - நாமக்கல் கவிஞர்

7. நாமக்கல் கவிஞருக்கு மத்திய அரசு -------இல் பத்மபூஷன் விருது அளித்து பாராட்டியது - 1971

8. பாரதியாரை முதன்முதலில் நாமக்கல் கவிஞர் சந்தித்த ஊர் - காரைக்குடி

9. பாரதியாரிடம் நாமக்கல் கவிஞர் பாடிக்காட்டிய பாடல் எது - தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்..

10. நாமக்கல் கவிஞர் முதன் முதலாக வரைந்த ஓவியம் - இராமகிருஷ்ண பரமஹம்சர்

11. மலைக்கள்ளன் என்ற நாவல் யாரால் எழுதப்பட்டது - நாமக்கல் கவிஞர்

12. எஸ்.விஜயராகவ ஆச்சாரியார் நாமக்கல் கவிஞருக்கு கொடுத்த பட்டம் - புலவர்

13. நாமக்கல் கவிஞரின் பாடல்களை தொகுத்து வெளியிட்டவர் - தணிகை உலகநாதன்

14. நாமக்கல் கவிஞர் புலவர் பட்டம் பெற காரணமான பாடல் தொகுப்பு - நாட்டுக்கும்மி


15. நாமக்கல் கவிஞர் எழுதிய நாடக நூல்களுக்கு எடுத்துக்காட்டு - மாமன் மகள், சரவண சுந்தரம்

No comments:

Post a Comment