Saturday, May 30, 2015

பொது அறிவு


 1. இந்தியாவில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1956

2. கீதம், வாத்தியம் இரண்டும் சேர்ந்தது எது - சங்கீதம்

3. சுதந்திர இந்தியாவின் மாநிலங்களை ஒருங்கிணைத்தவர் - சர்தார் வல்லபாய் படேல்

4. இந்திய மாநிலங்களில் உதய சூரியனின் பூமி என அழைக்கப்படும் மாநிலம் - அருணாசலபிரதேசம்

5. மொழிவாரிப் பிரிவினையில் முதன்முதலாக உருக்கொண்ட மாநிலம் - ஆந்திரபிரதேசம்

6. தாஜ்மகால் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது - உத்திரபிரதேசம்

7. புவனேஷ்வர் எந்த மாநிலத்தின் தலைநகர் - ஒரிசா

8. மத்திய நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - கட்டக் (ஒரிசா)

9. இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என புகழப்படும் மாநிலம் - கர்நாடகம்

10. வைரங்களின் நகரம் என அழைக்கப்படுவது - சூரத்

11. மிக அதிகமான கடற்கரை பகுதி கொண்ட மாநிலம் - குஜராத்

12. ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான பருவகாலம் - தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம்

13. சிரவணக் கலை என்பது - இசை

14. ஆப்பிள் கர்ட் என்ற நூலை எழுதியவர் - ஜார்ஜ் பெர்னாட்ஷா


15. இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - ஜவகர்லால் நேரு

Friday, May 29, 2015

Lab Assistant - GK Botany


1. காய்கறிகளை நறுக்கிய பின் கழுவினால், அவற்றிலுள்ள -------------- சத்து இழக்கப்படுகிறது - வைட்டமின்

2. உணவிலுள்ள, உடலுக்குத் தேவையான சத்துகளை ----------- எனக் கூறுகிறோம் - ஊட்டச்சத்துகள்

3. உடலுக்கு ஆற்றலை அளிப்பது எவ்வகை ஊட்டச்சத்துகள் - கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள்

4. உடலின் வளர்ச்சிக்கு உதவுவது - புரதங்கள்

5. உடலுக்கு உணவைக் கடத்தி உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துவது - நீர்

6. தர்பூசணியில் உள்ள நீரின் அளவு - 99%


7. வௌ்ளரிக்காயில் உள்ள நீரின் அளவு - 95%


8. காளானில் உள்ள நீரின் அளவு - 92%


9. பாலில் உள்ள நீரின் அளவு - 87%

10. உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு - 75%

11. முட்டையில் உள்ள நீரின் அளவு - 73%

12. ஒரு ரொட்டித்துண்டில் உள்ள நீரின் அளவு - 25%

13. உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துவது - வைட்டமின்கள்

14. உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துவது - தாது உப்புகள்


15. BUBBLE GUM  :  இதன் தமிழாக்கம் என்ன - குதப்பும் மிட்டாய்

பொதுத்தமிழ்


1. முருக நாயனார் எனப் போற்றப்படுபவர் - அருணகிரி நாதர்

2. மலரடி என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு எழுதுக - உவமைத் தொகை

3. பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயண கவி

4.  Telescope  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் - தொலைநோக்கி

5. தேசியம் காத்த செம்மல் என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் - திரு.வி..

6. சாதுவன் கடல் வணிகம் மேற்கொண்டான் என்னும் குறிப்பு காணப்படும் நூல் - மணிமேகலை

7. நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது - நான்கு

8. தேசியம், தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

9. வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணனாக இருந்தவர் - பெரியார்

10. நம்மாழ்வார் பிறந்த ஊர் - குருகூர்

11. புரம் என்னும் சொல் குறிப்பது - ஊர்

12. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் என்னும் பாடலை பாடியவர் - திரிகூடராசப்ப கவிராயர்

13. துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில் வல்லவர் - ராமசந்திர கவிராயர்

14. ஞானக் கண் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக - உருவகம்


15. தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

Thursday, May 28, 2015

Lab Assistant - GK Botany Q & A


1. அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் ---------- பயன்படுத்தப்படுகிறது - மலர்கள்

2. தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - வன்கட்டை

3. தாவரத்தண்டின் மென்மையான வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது - மென்கட்டை

4. தாவரத்தில் நீரினைக் கடத்த உதவுவது - மென்கட்டை

5. தாவரங்களுக்கு வலிமையையும், கடினத்தன்மையையும், உறுதியையும் அளிப்பது - வன்கட்டை

6. மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம் - கருவேலம்

7. படுக்கைகள், படகுகள் செய்யப்பயன்படும் மரம் - பைன்

8. காகிதம், தைலம் தயாரிக்கப் பயன்படும் மரம் - யுகலிப்டஸ்

9. இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்று அழைக்கப்படுவது - கேரளா

10. மிளகு ------------- நீக்கும் வல்லமை கொண்டது - தொண்டைக் கரகரப்பு

11. நெல் விளைச்சலுக்கு பெயர் பெற்ற ஊர் - தஞ்சாவூர்

12. வெற்றிலைக்குப் பெயர் பெற்ற ஊர் - கும்பகோணம்

13. ராஃப்லேசியா என்ற மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரத்தின், பூவின் விட்டம் - 1 மீட்டர்

14. ஒரு தர்ப்பூசணிப்பழத்தில் இருந்து எத்தனை தர்ப்பூசணிச்செடிகளை பயிர் செய்யலாம் - 6,00,000


15. சணல் தாவரத்தில் 85% செல்லுலோஸ் உள்ளதால், இது -------------- தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது - உயிரி நெகிழி (BIO - PLASTIC)

பொது அறிவு


1. பூமியின் போர்வையாக செயல்படுவது - வாயு மண்டலம்

2. எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1980

3. கண்கள் இருந்தும் பார்வையற்ற பிராணி - வௌவால்

4. பனிக்கட்டியின் மேல் வளரும் தாவரம் - க்ரயோபைட்ஸ்

5. ஒட்டக சிவிங்கி எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது - ஜிராபிடே

6. மனித உடலில் மிகச் சிறிய எலும்பு - அன்வில் (காது எலும்பு)

7. அலைநீளம் அதிகம் உள்ள வண்ணம் - சிவப்பு

8. வைட்டமின் மிக அதிகமாகக் காணப்படுவது - கனிகள், காய்கள்

9. மின்சாரத்தை கடத்தாத உலோகம் - பிஸ்மத்

10. தாவர இயலின் தந்தை எனப் போற்றப்படுபவர் - தியோபரேடஸ்

11. சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோள் - புளூட்டோ

12. மிகப் பெரிய வால்விண்மீன் - ஹோம்ஸ்

13. உலகின் மிகச் சிறிய உயிரினம் - நுண்ணுயிரி (அல்லது) வைரஸ்

14. தாவரங்களுக்கும் உயிருண்டு என்று கண்டறிந்தவர் - டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ்


15. படுத்து உறங்கத் தெரியாத மிருகம் எது - குதிரை

Wednesday, May 27, 2015

பொது அறிவு - தாவரவியல்

1) மருத்துவ குணமிக்க தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - மூலிகைகள்
2) சளித்தொல்லை, கோழை அகற்றல், மார்புச்சளி ஆகியவற்றை நீக்கி உடலுக்கு பலம் தரும் மூலிகை - தூதுவளை, துளசி
3) மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை - கீழாநெல்லி
4) வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் கனி - நெல்லி
5) பசித் தூண்டலுக்கு உதவும் மூலிகை - பிரண்டை
6) வயிற்றுப் பூச்சி நீக்கத்திற்கு பயன்படும் மூலிகை - வேம்பு
7) டென்னிஸ், ஹாக்கி மட்டை செய்யப்பயன்படும் மரம் - மல்பர்
8) கிரிக்கெட் மட்டை செய்யப்பயன்படும் மரம் - வில்லோ
9) மிகவும் அகன்ற தண்டுப்பகுதி கொண்ட மரம் - போபாப்
 10) பழமரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம் - ஆரஞ்சு
11) மிகப்பெரிய பூக்கும் தாவரம் - ராஃப்லோசியா
12) தீப்பற்றாத மரம் எது - செம்மரம் (ரெட் உட்)
13) வாழை நார், சணல் நார் போன்றவை தாவரத்தின் எந்தப்பகுதியில் இருந்து பெறப்படுகிறது - தண்டுப்பகுதி
14) விதையின் மேற்புறத்தில் இருந்து பெறப்படும் நார்களுக்கு எடுத்துக்காட்டு - பருத்தி, தேங்காய், இலவம் பஞ்சு
15) கற்றாழை, அன்னாசி போன்ற தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் நார்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது - இலை நார்கள்