Friday, May 1, 2015

SI - தேர்விற்கான வினா - விடை - உளவியல்

1.       ஒரு ஆந்தை தன் கூட்டினை ஒரு விநாடியில் கட்டினால், 200 ஆந்தைகள் தங்கள் கூட்டினை எவ்வளவு நேரத்தில் கட்டும்?
விடை: கூடு கட்டாது
விளக்கம்: ஆந்தைகள் தங்கள் கூட்டினை கட்டுவதில்லை. அது பிற பறவைகள் கட்டிய கூட்டில் அல்லது மரப்பொந்தில் தங்கும்.

2.   இங்கு + என்பது * குறியானால், * என்பது – குறியானால், - என்பது + குறியானால், 60 + 5 / 15 – 20 * 15 இன் மதிப்பு என்ன?
விடை: 25
விளக்கம்:
இங்கு + à *, * à -, - à+ ஆகும்.
ஆனால் / ஐ பற்றி குறிப்பிடாததால் / என்றே எடுத்துக்கொள்வோம்.
60 + 5 / 15 – 20 * 15 என்பது வினாவின்படி 60 * 5 / 15 + 20 – 15 என மாறும்.
60 * 5 / 15 + 20 – 15 = 60 * (1/3) + 20 – 15
= 20 + 20 - 15
= 40 – 15
= 25

3.   அவள் என்னுடைய மனைவியின் தாத்தாவின் ஒரே குழந்தையின் ஒரே மகள் என்று ஒரு பெண்ணை நோக்கி நிர்மல் கூறினார். அந்தப் பெண் நிர்மலுக்கு எந்த வகை உறவு?
விடை: மனைவி
விளக்கம்:
வினாவில் மனைவியின் தாத்தாவின் ஒரே குழந்தையின் ஒரே மகள் என்பது நிர்மலின் மனைவியையே குறிக்கும். எனவே, அந்த பெண் நிர்மலுக்கு மனைவி ஆவாள்.

4.  பொருந்தாததைத் தேர்வு செய்க.
டீ, காபி, குளிர்பானம், சூப்
விடை: குளிர்பானம்
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள டீ, காபி, சூப் அனைத்தும் பொதுவாக சூடாக பருகுவது. ஆனால் குளிர்பானம் என்பது குளிர்ந்த பானமாகும்.

5.     ஒரு குழந்தையை இடித்துவிட்டு அதிவேகமாக சென்றுவிட்ட காரை நீங்கள் பார்த்த பிறகு கீழ்கண்டவற்றுள் முதலாவதாக எந்த பணியை செய்வீர்கள்?
காரின் எண்ணைக் குறித்துக் கொள்வது
காரை நிறுத்தும்படி டிரைவரை நோக்கி சத்தமிடுவது 
போலீசுக்கு தகவல் தெரிவித்து அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது
விடைகாரின் எண்ணைக் குறித்துக் கொள்வது
விளக்கம்:
தரப்பட்டுள்ள சம்பவத்தைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டிய முதல் நடவடிக்கையும்பயனுள்ள செயலும் குழந்தையை இடித்த காரின் எண்ணைக் குறித்து கொள்வதேயாகும்.



No comments:

Post a Comment