Wednesday, May 27, 2015

பொது அறிவு - தாவரவியல்

1) மருத்துவ குணமிக்க தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - மூலிகைகள்
2) சளித்தொல்லை, கோழை அகற்றல், மார்புச்சளி ஆகியவற்றை நீக்கி உடலுக்கு பலம் தரும் மூலிகை - தூதுவளை, துளசி
3) மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை - கீழாநெல்லி
4) வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் கனி - நெல்லி
5) பசித் தூண்டலுக்கு உதவும் மூலிகை - பிரண்டை
6) வயிற்றுப் பூச்சி நீக்கத்திற்கு பயன்படும் மூலிகை - வேம்பு
7) டென்னிஸ், ஹாக்கி மட்டை செய்யப்பயன்படும் மரம் - மல்பர்
8) கிரிக்கெட் மட்டை செய்யப்பயன்படும் மரம் - வில்லோ
9) மிகவும் அகன்ற தண்டுப்பகுதி கொண்ட மரம் - போபாப்
 10) பழமரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம் - ஆரஞ்சு
11) மிகப்பெரிய பூக்கும் தாவரம் - ராஃப்லோசியா
12) தீப்பற்றாத மரம் எது - செம்மரம் (ரெட் உட்)
13) வாழை நார், சணல் நார் போன்றவை தாவரத்தின் எந்தப்பகுதியில் இருந்து பெறப்படுகிறது - தண்டுப்பகுதி
14) விதையின் மேற்புறத்தில் இருந்து பெறப்படும் நார்களுக்கு எடுத்துக்காட்டு - பருத்தி, தேங்காய், இலவம் பஞ்சு
15) கற்றாழை, அன்னாசி போன்ற தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் நார்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது - இலை நார்கள்

No comments:

Post a Comment