Friday, May 8, 2015

SI - தேர்விற்கான வினா - விடை - உளவியல்

           கீழ்கண்ட 1, 2 ஆகிய கேள்விகளில் வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு..
1.   மெடுல்லா, ஐரிஸ், கார்னியா, ரெட்டினா
விடை: மெடுல்லா
விளக்கம்:
மெடுல்லா என்பது மூளைத்தண்டின் அடிப்பகுதி ஆகும். ஆனால்
ஐரிஸ், கார்னியா, ரெட்டினா ஆகியவை கண்களின் பகுதிகளாகும்.

2.   13–156, 12–144, 15-180, 16-176
விடை: 16-176
விளக்கம்:
இங்கு தரப்பட்டுள்ள அனைத்து ஜோடிகளிலும் முதல் எண்ணின் 12 மடங்கே இரண்டாவது எண். அதாவது,
13–156 à 13 * 12 = 156
12–144 à 12 * 12 = 144
15-180 à 15 * 12 = 180
16-176 à 16 * 12 = 192 ஆனால் தொகுப்பில் 176 என உள்ளது. எனவே, வேறுபட்ட ஜோடி 16-176 ஆகும்.

3.   L என்றால் +, M என்றால் -, N என்றால் *, P என்றால் / எனில், 14N10L42P2M8 = ?
விடை: 153
விளக்கம்:
வினாவின்படி,
14N10L42P2M8 = 14 * 10 + 42 / 2 – 8
BODMAS விதியின்படி,
14 * 10 + 42 / 2 – 8 = 14 * 10 + 21 – 8
= 140 + 21 – 8
= 161 – 8
= 153

4.   அகர வரிசையில் (Alphabetical) சரியான வரிசையை எழுதுக.
அ) Preach, ஆ) Praise, இ) Precinet, ஈ) Precept, உ) Precede
விடை: ஆ, அ, உ, ஈ, இ
விளக்கம்:
தரப்பட்டுள்ள ஆங்கில சொற்களை ஆங்கில அகவரிசைப்படி கீழ்கண்டவாறு வரிசைப்படுத்த வேண்டும்.
Praise, Preach, Precede, Precept, Precinet

5.   வானம் நட்சத்திரமாக, நட்சத்திரம் மேகமாக, மேகம் பூமியாக, பூமி மரமாக, மரம் புத்தகமாக இருந்தால் பறவைகள் எங்கு பறக்கும்?
விடை: நட்சத்திரம்
விளக்கம்:
பொதுவாக பறவைகள் வானத்தில் பறக்கும். ஆனால் இங்கு வானம் என்பது நட்சத்திரம் என குறியீடப்பட்டுள்ளது.
எனவே, சரியான விடை நட்சத்திரம் ஆகும்.



No comments:

Post a Comment