Monday, May 4, 2015

SI - தேர்விர்கான வினா - விடை - உளவியல்

1.       கீழ்கண்ட குழுவில் மற்ற மூன்றிலிருந்து பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
குடம், ஜாடி, தட்டு, டம்லர்
விடை: தட்டு
விளக்கம்:
வினாவிலுள்ள குழுவில் தட்டைத் தவிர மற்ற மூன்றிலும் தண்ணீரை நிரப்பி வைக்க முடியும்.

2.       ESTR என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை  கொண்டு ஒரு எழுத்து கூட மீண்டும் வராதபடி, எத்தனை அர்த்தமுள்ள வார்த்தைகளை எழுத முடியும்?
விடை: 1
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள ESTR என்ற வார்த்தையைக் கொண்டு ஒரு எழுத்து கூட மீண்டும் வராதபடி REST என்ற ஒரு வார்த்தையை மட்டுமே நம்மால் எழுத முடியும்.

3.       கீழ்கண்ட குழுவில் மற்ற மூன்றிலிருந்து பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
செப்பு, பாதரசம், துத்தநாகம், அலுமினியம்
விடை: பாதரசம்
விளக்கம்:
செப்பு, துத்தநாகம், அலுமினியம் ஆகியவை அறை வெப்பநிலையில் திடமாக இருக்கும். ஆனால், பாதரசம் அறை வெப்பநிலையில் திரவமாக காணப்படும்.

4.   இங்கு வெள்ளை நிறத்தை கருப்பு எனவும், கருப்பு நிறத்தை சிகப்பு எனவும், சிகப்பு நிறத்தை நீலம் எனவும், நீல நிறத்தை மஞ்சள் எனவும், மஞ்சள் நிறத்தை பச்சை எனவும் குறிக்கப்பட்டால், வானம் எந்த நிறத்தில் காணப்படும்?
விடை: மஞ்சள்
விளக்கம்:
வானம் நீல நிறத்தில் காணப்படும் என நமக்கு தெரியும். ஆனால் இங்கு நீல நிறம் மஞ்சள் என கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கேள்விக்கு சரியான விடை மஞ்சள் ஆகும்.
5.       கீழ்கண்ட எண் தொகுப்பில் எந்த ஒரு எண் மற்ற எண்களிலிருந்து வேறுபட்டுள்ளது.
217, 103, 241, 157, 131
விடை: 217
விளக்கம்:

கொடுக்கப்பட்ட 103, 241, 157, 131 ஆகிய எண்கள் அனைத்தும் பகா எண்களாகும். எனவே, இக்குழுவில் வேறுபட்டுள்ள எண் 217.

No comments:

Post a Comment