Saturday, June 13, 2015

பொது அறிவு - தாதுக்கள் மற்றும் உலோகங்கள்


1. எந்த ஒரு குறிப்பிட்ட கனிமத்தில் இருந்து சேர்மநிலையில் உலோகம், எளிதாக லாபகரமான முறையில், பெருமளவு பிரித்தெடுக்க முடிந்தால் அந்த கனிமம் ----------- எனப்படும். - தாது

2. மாக்னசைட், டாலமைட், கார்னலைட், எப்சம் உப்பு போன்றவை எதன் தாதுக்கள் - மக்னீசியம்

3. மேக்னடைட் ஹேமடைட், சிட்ரைட், லிமோடைட், இரும்பு கந்தகக்கல் ஆகியன எதன் தாதுக்கள் - இரும்பு

4. மிகவும் லேசான உலோகம் ----- ஆகும் - லித்தியம்

5. மிகவும் கனமான உலோகம் எது - ஆஸ்மியம்

6. X கதிர்கள் ஊடுருவாத உலோகம் ------ ஆகும் - காரீயம்

7. தாவரங்களின் பச்சையத்தில் காணப்படும் உலோகம் - மெக்னீசியம்

8. தங்க நகைகளில் KDM 916 என்று குறிக்கப்பட்டு இருப்பதில் KDM  என்பது - காட்மியம்

9. ரூடைல், இல்மடைட் ஆகியவை எதன் தாதுக்கள் - டைட்டானியம்

10. மாலகைட், தாமிரபைரைட், காப்பர் கிளான்ஸ், க்யூப்ரைட் ஆகியவை எதன் தாதுக்கள் - தாமிரம்

11. தாதுவுடன் உள்ள மாசுகளை (காங்கு) உருகிடும் சேர்மமாக மாற்றி அதை நீக்கிட தாதுவுடன் சேர்க்கும் பொருள் - இளக்கி

12. மிகவும் லேசான தனிமம் எது - ஹீலியம்

13. நீர்ம நிலையிலுள்ள உலோகம் எது - பாதரசம்

14. மின்கடத்தும் திறன் அதிகம் கொண்ட உலோகம் - வௌ்ளி


15. மின்சாரக் கம்பியாக அதிகம் பயன்படுத்தப்படும் உலோகம் - தாமிரம்

No comments:

Post a Comment