Wednesday, June 24, 2015

பொது அறிவு - விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்




 1. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜீல்

2. ஒரு பொருளின் ஓய்வுநிலையையோ அல்லது இயக்க நிலையையோ மாற்றுகின்ற அல்லது மாற்ற முயற்சிக்கின்ற செயல் --------------- எனப்படும் - விசை

3. விசை ஒரு -------- அளவு ஆகும் - வெக்டர்

4. விசையின் ளு. அலகு என்ன - நியூட்டன்

5. ஒரு பொருளின் முடுக்கத்திற்குக் காரணம் ............ - சமன் செய்யப்படாத விசை

6. உந்தமாறுபாட்டு வீதத்திற்குச் சமமான இயற்பியல் அளவு - விசை

7. புவிப்பரப்பில் 50 கி.கி நிறையுள்ள மனிதனின் எடை - 490 N

8. ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம் - சுழி

9. மின்கலத்தில் எந்த ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றபடுகிறது - வேதி ஆற்றல்

10. ஆற்றலின் அலகு ------ ஆகும். - ஜூல்

11. பொருளின் நிலையைப் பொறுத்து அதனுள் அடங்கியுள்ள ஆற்றலைக் குறிப்பது -------- ஆகும் - நிலை ஆற்றல்

12. ஒரு பொருளின் மீது புற விசைகள் செயல்படாத வரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு -------- ஆகும் - நிலைமம்

13. ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்பது - ஆற்றல் அழிவின்மை விதி

14. மின்விசிறியில் மின்னாற்றலானது -------- ஆக மாற்றப்படுகிறது - இயக்க ஆற்றல்

15. தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் -----------ஆகும் - வேதி ஆற்றல்

No comments:

Post a Comment