Monday, June 15, 2015

பொது அறிவு - உரங்கள், பூச்சிக் கொல்லிகள்


 1. இயற்கை உரம் என்பது - கரிமப் பொருள்

2. தாவரங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கும் இன்றியமையாத தனிமங்கள் எத்தனை - 16

3. தாவர மற்றும் விலங்குக் கழிவுகளை விரைவில் சிதைப்பதற்காக மண்புழுக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உரம் - மண்புழு தொழுஉரம் அல்லது மண்புழு இயற்கை உரம்

4. பசுந்தாள் உரம் என்பது - சணல் , கொழிஞ்சி கொண்டு தயாரிக்கப்படுவது

5. உயிரி உரங்களின் ஆதாரம் -------------------------- ஆகும் - பாக்டீரியா, நீலபசும்பாசி, பூஞ்சைகள்

6. நைட்ரஜனின் உரங்களுக்கு எடுத்துக்காட்டு - யூரியா, அம்மோனியம் சல்ஃபேட், அம்மோனியம் நைட்ரேட் போன்றவை.

7. பாஸ்பரஸ் உரங்களுக்கு (கனிச் சத்துக்கள்) எடுத்துக்காட்டுகள் - தனி சூப்பர்பாஸ்பேட், டிரிப்பிள் சூப்பர் பாஸ்பேட்

8. பொட்டாசிய உரங்களுக்கு (சாம்பல் சத்துக்கள்) எடுத்துக்காட்டுகள் - பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைடு.

9. கலப்பு உரங்களுக்கு எடுத்துக்காட்டு - நைட்ரோ பாஸ்பேட், அம்மோனியம் பாஸ்பேட், டை-அம்மோனியம்-பாஸ்பேட்

10. பூச்சிகளைக் கொல்லப் பயன்படும் வேதிப்பொருள்கள் ---------- எனப்படும் - பூச்சிக்கொல்லிகள்

11. பூச்சிக்கொல்லிகளுக்கு எடுத்துக்காட்டுகள் - D.D.T (டை குளோரோ டை பீனைல் ட்ரை குளோரோ ஈத்தேன்), மாலத்தியான்

12. பூஞ்சைகளை அழிக்க உதவுபவை - போர்டாக்ஸ் கலவை

13. எலிக்கொல்லிகளுக்கு எடுத்துக்காட்டுகள் - துத்தநாக பாஸ்பேட், ஆர்சனிக்

14. தேவையற்ற செடிகளை அழிக்க உதவுபவை - களைக்கொல்லிகள்


15. களைக்கொல்லிகளுக்கு எடுத்துக்காட்டு - 2,4-D (2, 4 - டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்)

2 comments: