Monday, June 15, 2015

பொதுத்தமிழ் : சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன்


 1. புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல் - சி.மணி எழுதிய யாப்பும் கவிதையும்

2. சி.மணி எழுதிய நூல்களுக்கு எடுத்துக்காட்டு - வரும் போகும், ஒளிச்சேர்க்கை

3. சிற்பி அறக்கட்டளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது - 1996

4. சிற்பி பாலசுப்பிரமணியம் பிறந்த ஊர் - பொள்ளாச்சி (கோவை மாவட்டம்)

5. மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர் - சிற்பி பாலசுப்ரமணியம்

6. சிற்பி எழுதிய நூல்களுக்கு எடுத்துக்காட்டு - நிலவுப்பூ, சிரித்த முத்துகள், ஒளிப்பறவை, பூஜ்யங்களின் சங்கிலி, காற்று வரைந்த ஓவியம்

7. மு.மேத்தா பிறந்த ஆண்டு - 1945 செப்டம்பர் 5

8. மு.மேத்தா பிறந்த ஊர் - பெரியகுளம் (தேனி மாவட்டம்)

9. மு.மேத்தா படைத்த நூல்களுக்கு எடுத்துக்காட்டு - கண்ணீர்பூக்கள், ஊர்வலம், திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், மனச்சிறகு, முகத்துக்கு முகம்

10. வானம்பாடி என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் முன்னணியில் நிற்பவர் யார் - மு.மேத்தா

11. மு.மேத்தாவுக்கு புகழைத்தேடித்தந்த சமூக விமர்சனத் தொனியில் அமைந்த கவிதை எது - தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி

12. தமிழன்பன் பிறந்த ஊர் - சென்னிமலை (ஈரோடு)

13. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் - .ஜெகதீசன்

14. ஈரோடு தமிழன்பனின் புனைப்பெயர்கள் - தமிழன்பன், விடிவெள்ளி


15. தனிப்பாடல் திரட்டு - ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றவர் யார் - ஈரோடு தமிழன்பன்

No comments:

Post a Comment