Tuesday, June 30, 2015

பொது அறிவு - சுவாசித்தல்




 1. சுவாசித்தல் எத்தனை வகைப்படும் - 2

2. சுவாசித்தலின் வகைகள் யாவை - காற்றுச் சுவாசம், காற்றில்லாச் சுவாசம்(நொதித்தல்)

3. ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு - இலை

4. சுவாசித்தலில் குளுக்கோஸ் என்பது - 6 கார்பன் கொண்ட சேர்மம்.

5. காற்றில்லா சுவாசத்தின் மற்றொரு பெயர் - நொதித்தல்

6. ஈஸ்ட்டின் காற்றிலா சுவாசத்தினால் உண்டாவது - எத்தனால்

7. ஆக்சிஜனைப் பயன்படுத்தி ஸ்டார்ச்சை முழுமையாக சிதைத்து ஆற்றலைப் பெறும் முறை - காற்றுள்ள சுவாசம்

8. காற்றில்லா சூழ்நிலையில் ஒரு சில எளிய தாவரங்களும் பாக்டீரியங்களும் உணவுப் பொருளை முழுமையாக சிதைக்காமல் ஒரு பகுதியை மட்டும் சிதைத்து ஆற்றலை பெறும் முறை - காற்றில்லா சுவாசம் .கா பூஞ்சை, பாக்டீரியா

9. காற்றிலா சுவாசத்திற்கு எடுத்துக்காட்டு - பால் தயிராகும் நிகழ்வு

10. பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்

11. கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்

12. ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்

13. ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி தேவை என்பதனை நிரூபிக்கும் சோதனை - கேனாங்கின் ஒளித்திரை சோதனை

14. உமிழ்நீரில் உள்ள நொதியின் பெயர் - டயலின்

15. ஒளிச்சேர்க்கைக்கு கார்பன் - டை - ஆக்ஸைடு தேவை என்பதனை நிரூபிக்கும் சோதனை - மோலின் அரை இலை சோதனை

Saturday, June 27, 2015

பொது அறிவு - வெப்பம், ஒளி மற்றும் ஒலி




1. ஒளி ஒரு வருட காலத்தில் பயணிக்கும் தொலைவு ------- எனப்படும் - ஒளியாண்டு

2. ஒளியின் அடர்த்தியை ( Intensity) அளக்க உதவும் அலகு - கேண்டீலா (candela)

3. ஒளியைக் குறித்த படிப்பின் பெயர் -  Optics

4. ஒளியின் திசைவேகத்தை முதன் முதலில் வெற்றிகரமாக கணக்கிட்டவர் - ரோமர்

5. பொருள்களின் ஒளிவிலகல் எண்ணைக் காணப்பயன்படுவது - நிறமாலைமானி.

6. ஒரு பொருளின் வெப்பம் மற்றொரு பொருளுக்கு ஊடகமின்றி கடத்தப்படும் முறையானது இவ்வாறு அழைக்கப்படுகிறது - வெப்பக் கதிர்வீசல்

7. ஒளியின் அடிப்படை நிறங்கள் யாவை - சிவப்பு, பச்சை, நீலம்

8. பாதரசம் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்பட முக்கிய காரணம் - குறைந்த தன் வெப்ப ஏற்புத்திறன்.

9. மனித உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது இரத்தத்தின் பாகியல் எண் மதிப்பு ----------- - குறைகிறது

10. மனித உடலின் சராசரி வெப்பநிலை -------- ஆகும் - 98.6°F (37°C)

11. பெட்ரோலியத்தின் ஒளிவிலகல் எண் என்ன - 1.38

12. நீரின் ஒளிவிலகல் எண் என்ன - 1.33

13. வைரத்தின் ஒளிவிலகல் எண் என்ன - 2.419

14. காற்றின் ஒளிவிலகல் எண் என்ன - 1

15. நீரின் கொதிநிலை -------- ஆகும் - -37.7°F (100°C)

Friday, June 26, 2015

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - ரா.பி.சேதுப்பிள்ளை




1. ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896

2. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

3. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

4. உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

5. ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை

6. ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச் சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்

7. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14

8. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்

9. ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்

10. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

11. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி

12. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்

13. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)

14. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்

15. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961