Friday, June 26, 2015

பொது அறிவு - அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்



1. அணு என்ற சொல்லின் பொருள் - பிரிக்க முடியாத

2. நவீன அணு இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார் - ஜே.ஜே.தாம்சன்

3. நீரிலுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் நிறைவிகிதம் --------- ஆகும் - 1:8

4. எலக்ட்ரான் மற்றும் ஐசோடோப்புகளைக் கண்டறிந்தவர் யார் - ஜே.ஜே.தாம்சன்

5. ஓர் அணுவின் மூன்று வகையான துகள்கள் யாவை - எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான்

6. எலக்ட்ரான் என்பது -------------- - எதிர்மின்சுமையுடைய துகள்

7. புரோட்டான் என்பது -------------- - நேர்மின்னூட்டமுடைய துகள்

8. நியூட்ரான் என்பது ------------- - மின்னூட்டமற்ற ஒரு துகள்

9. புரோட்டான்களும், நியூட்ரான்களும் அணுவின் எப்பகுதியில் இறுகப் பிணைந்துள்ளன - மையப் பகுதி (உட்கரு)

10. ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு என்பது - சம எண்ணிக்கையுள்ள புரோட்டான்களையும், வேறுபட்ட எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களையும் கொண்டிருக்கும்

11. அணுக்கருவை கண்டறிந்தவர் யார் - ரூதர்ஃபோர்டு

12. பொருண்மை அழிவின்மை விதியைக் கண்டறிந்தவர் - லவாய்சியர்

13. மாறாவிகித விதியைக் கண்டறிந்தவர் யார் - ப்ரௌஸ்ட்

14. புரோட்டானை கண்டறிந்தவர் யார் - கோல்டுஸ்டீன்

15. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட இலேசான அணுக்கருக்கள் இணைந்து கனமான அணுக்கருவை உருவாக்கும் செயல்முறை - அணுக்கரு இணைவு

No comments:

Post a Comment