Tuesday, June 23, 2015

பொதுத்தமிழ் - ஆலந்தூர் கோ.மோகனரங்கன்



தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

1. ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பிறந்த ஆண்டு - ஜீன், 1942

2. புதிய பாதை என்னும் கையெழுத்து இலக்கிய ஏட்டின் ஆசிரியராக இருந்து தமிழ்ப் பணியைத் தொடங்கியவர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

3. மரபுக் கவிதைகள், கவிதை நாடகம், நாவல், சிறுகதைகள் எனப் பல்வேறு கோணங்களில் நூல்கள் எழுதியவர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

4. குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரில் ஹைக்கூ கவிதைகள் எழுதியவர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

5. தாத்தாவுக்குத் தாத்தா என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் வரலாற்றை எழுதியவர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

6. வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை என்னும் தலைப்பில் மு. வரதராசனார் வாழ்க்கை வரலாறு எழுதியவர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

7. வானொலி, தொலைக்காட்சி, பாவரங்கமேடை என்று பல ஊடகங்களில் பங்கேற்றியவர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

8. இமயம் எங்கள் காலடியில் கவிதைத் தொகுப்புநூலை எழுதியவர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

9. தமிழ்ப்பா புனைவதில் முத்திரை பதித்த பெரும் பாவலர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

10. கிளை நூலகராகப் பணிபுரிந்தபடியே புகழ்பெற்ற பாக்களையும் இசைப்பாக்களையும் எழுதியவர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

11. தமிழக அரசின் பாவேந்தர் விருது, குழந்தை இலக்கிய மாமணி, வி..பி. விருது, கவிவேந்தர், முத்தமிழ்க்கவிஞர் உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

12. ஆலந்தூர் கோ. மோகனரங்கனாருக்கு .வி.எம்.அறக்கட்டளையில் தங்கப்பதக்கம் பரிசு பெற்றுத் தந்த நாடகம் - பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்

13. எந்த நிலையிலும் உண்மை பேசவேண்டும் என்னும் கருத்தை முதன்மையாக வைத்து சிறுவர் கவிதை நாடகத்தை தமிழில் முதலில் எழுதியவர் என்ற சிறப்பை பெற்றவர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

14. ஆலந்தூர் கோ. மோகனரங்கனாரின் முதல் மெல்லிசைப் பாடல் சென்னை வானொலியில் ஒலிபரப்பான ஆண்டு - 1967-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15

15. ஆசை, அழகு, ஓசை, உணர்வு, பூசை, புலமை முதலான காரணங்களுக்காகக் கவிதை எழுதியவர் - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

No comments:

Post a Comment