Friday, June 12, 2015

பொது அறிவு - ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கம்


1. ஒரு வேதிவினையில் ஆக்ஸிஜன் சேர்க்கப்படுதலோ ஹைட்ரஜன் நீக்கப்படுதலோ எலக்ட்ரான்கள் நீக்கப்படுதலோ நிகழும்போது அந்த வினை --------- எனப்படுகிறது. - ஆக்ஸிஜனேற்றம்

2. அமிலமேற்றப்பட்ட பொட்டாசியம் டைகுரோமேட் சிறந்த --------- ஆகும் - ஆக்ஸிஜனேற்றி

3. ஒரு தனிமம் எலக்ட்ரானைப் பெறுமாயின் அது - எதிர்மறை ஆக்சிஜனேற்றம்

4. வேதிவினைகளில் எலக்ட்ரான்களை இழக்கும் பொருட்கள் ------- ஆகும் - ஒடுக்கும் பொருட்கள் அல்லது ஒடுக்கிகள்

5. ஆக்சிஜனை சேர்த்தல் அல்லது ஹைட்ரஜனை நீக்கல் - ஆக்சிஜனேற்றம்

6. ஹைட்ரஜனை சேர்த்தல் அல்லது ஆக்சிஜனை நீக்கல் - ஒடுக்கம்

7. ஒரு மூலக்கூறில், பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அணுவின் மீதுள்ள எஞ்சிய மின்னூட்டமே தனிமத்தின் ------ ஆகும். - ஆக்சிஜனேற்ற எண்

8. எல்லா சேர்மங்களிலும் ஃப்ளோரினின் ஆக்சிஜனேற்ற எண் - -1

9. பொதுவாக எல்லா சேர்மங்களிலும், ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் - +1

10. Cr2O72--யில் காணும் குரோமியத்தின் ஆக்சிஜனேற்ற எண் - +6

11. ஒரு வேதிவினையில் ஒரு தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் அதிகரிப்பது - ஆக்ஸிஜனேற்றம்

12. ஒரு வேதிவினையில் ஒரு தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் குறைவது - ஆக்ஸிஜன் ஒடுக்கம்

13. REDOX என்பதன் விளக்கம் - ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்கம் (Oxidation - Reduction)
14. H2O2, BaO2, Na2O2 போன்ற பெர்ஆக்சைடுகளில் ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண் - -1


15. உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் - -1

No comments:

Post a Comment