Friday, June 26, 2015

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - ரா.பி.சேதுப்பிள்ளை




1. ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896

2. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

3. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

4. உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

5. ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை

6. ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச் சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்

7. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14

8. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்

9. ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்

10. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

11. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி

12. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்

13. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)

14. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்

15. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961

No comments:

Post a Comment