Tuesday, June 9, 2015

பொதுத்தமிழ் - கண்ணதாசன்


1. கண்ணதாசனின் காலம் - 24 ஜீன் 1927 - 17 அக்டோபர் 1981 (அகவை 54)

2. கண்ணதாசனின் இயற்பெயர் - முத்தையா

3. கண்ணதாசனின் ஊர் - சிறுகூடல்பட்டி (சிவகங்கை மாவட்டம்)

4. கண்ணதாசனின் பெற்றோர் - சாத்தப்பனார் - விசாலாட்சி ஆச்சி

5. கவிஞர் கண்ணதாசனின் படைப்புகளுக்கு (காவியம்) எடுத்துக்காட்டு - இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்து மதம், மாங்கனி

6. கண்ணதாசனின் கவிதை நூல்களுக்கு எடுத்துக்காட்டு - சுருதி சேராத ராகங்கள், பஜகோவிந்தம்

7. இருந்து பாடிய இரங்கல் பா என்ற தலைப்பில் தனக்கே இரங்கல் பா பாடிக்கொண்ட முதல் கவிஞர் - கண்ணதாசன்

8. கண்ணதாசனின் வாழ்க்கைச்சரிதத்திற்கு எடுத்துக்காட்டு - வனவாசம், மனவாசம், எனது வசந்த காலங்கள்

9. கண்ணதாசனின் கட்டுரைகளுக்கு எடுத்துக்காட்டு - கடைசிப்பக்கம், எண்ணங்கள், தோட்டத்து மலர்கள்

10. கண்ணதாசனின் நாடகங்களுக்கு எடுத்துக்காட்டு - அனார்கலி, சிவகங்கைச்சீமை

11. கண்ணதாசன் எந்த படைப்பிற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார் - சேரமான் காதலி

12. கவிஞர் கண்ணதாசன் விளக்கவுரை எழுதிய நூல் - அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி

13. சண்டமாருதம், திருமகள், திரைஒலி, மேதாவி, தென்றல், முல்லை, தென்றல்திரை ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர் - கண்ணதாசன்

14. காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகியவை யாருடைய புனைப்பெயர்கள் - கண்ணதாசன்


15. டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையிலிருந்து கொண்டு கண்ணதாசன் எழுதிய குறுங்காவியம் - மாங்கனி

No comments:

Post a Comment