Tuesday, June 2, 2015

பொது அறிவு - தாவரவியல்


1. மனித உடலின் அடிப்படைக் கட்டமைப்பு ------------- ஆகும் - செல்

2. சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை விஞ்ஞானிகள் -------------- என்று அழைக்கிறார்கள் - புரோகேரியாட்டிக் செல்

3. விலங்குசெல்லில் செல்லைச் சுற்றியுள்ள படலம் ---------- ஆகும் - பிளாஸ்மா படலம்

4. சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது ---------- ஆகும் - புரோட்டோபிளாசம்

5. புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர் யார் - ஜே..பர்கின்ஜி

6. பிளாஸ்மா படலத்திற்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோ பிளாசத்தின் பகுதி -------------- ஆகும் - சைட்டோபிளாசம்

7. செல்லின் கட்டுப்பாட்டு மையம் ----------- ஆகும் - உட்கரு

8. செல்லின் உட்கருவின் வடிவம் --------- ஆகும் - கோள வடிவம்

9. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது ----------- ஆகும் - உட்கரு

10. செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது - மைட்டோகாண்ட்ரியா

11. உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவதும் ------------- ஆகும் - கோல்கை உறுப்புகள்

12. தாவர செல்லில் உள்ள கோல்கை உறுப்புகள் --------- என அழைக்கப்படுகின்றது - டிக்டியோசோம்கள்

13. செல்லுக்குள் இருக்கும் பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது ------------- ஆகும் - எண்டோபிளாச வலை

14. செல்லின் புரதத்தொழிற்சாலை என்று அழைக்கப்படுவது - ரிபோசோம்கள்


15. செல்லின் தற்கொலை பைகள் என்று அழைக்கப்படுவது - லைசோசோம்கள்

No comments:

Post a Comment