Friday, April 24, 2015

SI - தேர்விற்கான வினா விடை - உளவியல்

1.       ஒர் எண்ணின் பத்தில் ஒரு பகுதி 63. அந்த எண்ணைக் காண்க.
விடை: 630
விளக்கம்:
கண்டுபிடிக்க வேண்டிய எண் x எனக் கொள்க.
சமன்பாடு, (1/10) X = 63
X = 63 * 10
X = 630


2.       24 மீ நீளமுள்ள ஒரு ரிப்பன் 3 : 2 : 7 என்ற விகிதத்தில் 3 துண்டுகளாக வெட்டப்படுகிறது எனில், ஒவ்வொரு துண்டின் நீளம் என்ன?
விடை: 6 மீ, 4 மீ, 14 மீ
விளக்கம்:
ரிப்பனின் நீளம் = 24 மீ
மூன்று துண்டுகளின் விகிதங்கள் = 3 : 2 : 7
மொத்த பகுதிகள் = 3 + 2 + 7 = 12
முதல் துண்டின் நீளம் = (3/12) * 24 = 6 மீ
இரண்டாம் துண்டின் நீளம் = (2/12) * 24 = 4 மீ
மூன்றாம் துண்டின் நீளம் = (7/12) * 24 = 14 மீ
ரிப்பனின் மூன்று துண்டுகளின் நீளங்கள் = 6 மீ, 4 மீ, 14 மீ


3.       ராம் என்பவர் ஒரு மிதிவண்டியை ரூ. 5000 க்கு வாங்கினார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ரூ. 600 குறைத்து விற்றார். மிதிவண்டியின் விற்பனை விலை மற்றும் நட்ட சதவீதத்தைக் காண்க.
விடை: விற்பனை விலை = ரூ 4400, நட்ட சதவீதம் = 12%
விளக்கம்:
மிதிவண்டியின் அடக்கவிலை = ரூ. 5000
நட்டம் = ரூ 600
விற்பனை விலை = அடக்கவிலை – நட்டம் = 5000 – 600
மிதிவண்டியின் விற்பனை விலை = ரூ 4400
நட்ட சதவீதம் = (நட்டம்/அடக்கவிலை) * 100
= (600/5000) * 100
நட்டம் = 12%


4.       காயத்ரி 3 நாட்களில் முறையே 4 மணிநேரம் 5 மணிநேரம் மற்றும் 3 மணிநேரம் படிக்கிறாள். அவள் சராசரியாக எத்தனை மணிநேரம் தினமும் படிக்கிறாள்.
விடை: 4 மணிநேரம்
விளக்கம்:
படிப்பின் சராசரிநேரம் = (படித்த நேரத்தின் கூடுதல்/படித்த நாட்களின் எண்ணிக்கை)
= [(4 + 5 + 3)/3] மணி
= 12/3
= 4 மணிநேரம் (ஒரு நாளைக்கு)
இதிலிருந்து காயத்ரி சராசரியாக ஒரு நாளைக்கு 4 மணிநேரம் படித்திருக்கிறாள் என்று சொல்லலாம்.


5.       12, 14, 25, 23, 18, 17, 24, 20 என்ற விவரங்களின் இடைநிலையைக் காண்க.
விடை: 19
விளக்கம்:
கொடுத்த விவரங்களை ஏறுவரிசையில் எழுதுக.
12, 14, 17, 18, 20, 23, 24, 25
கொடுக்கப்பட்ட விவரங்களின் எண்ணிக்கை 8. இது இரட்டைப்படை எண் ஆகும்.
ஆகவே இடைநிலை என்பது இரு நடு விவரங்கள் 18 மற்றும் 20 இன் கூட்டுச்சராசரி ஆகும்.
இடைநிலை = (18 + 20)/2
= 38/2

= 19

No comments:

Post a Comment