Saturday, April 11, 2015

SI - தேர்விற்கான வினா - விடை - உளவியல்

1. கீழே கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் விடுபட்ட எண்ணை கண்டுபிடிக்கவும்.
1. 6, 15, ?, 45, 66, 91
விடை: 28
விளக்கம்:
இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்களின் முறை, +9, +13, +17, +21, +25 என எண் 9திலிருந்து தொடங்கி ஒவ்வொரு எண்ணிலும் நான்கு நான்காக கூட்டி விடை காண வேண்டும்.
அதாவது,
6 + 9 = 15
15 + 13 = 28
28 + 17 = 45
45 + 21 = 66
66 + 25 = 91
எனவே, விடுபட்ட எண் 28 ஆகும்.

2. 10, 18, 28, 40, 54, 70, ?
விடை: 88
விளக்கம்:
இங்கு கொடுக்கப்பட்ட எண்களின் முறை,
10 + (2 * 4) = 18
18 + (2 * 5) = 28
28 + (2 * 6) = 40
40 + (2 * 7) = 54
54 + (2 * 8) = 70
70 + (2 * 9) = 88
எனவே, விடுபட்ட எண் 88

3. 1, 9, 25, 49, ?, 121
விடை: 81
விளக்கம்:
இங்கு கொடுக்கப்பட்ட எண்கள் 1றிலிருந்து வரும் ஒற்றைப்படை எண்களின் வர்க்கம் ஆகும்
1 * 1 = 1
3 * 3 = 9
5 * 5 = 25
7 * 7 = 49
11 * 11 = 121
ஆக விடுபட்ட எண்ணானது 9 * 9 = 81

4. 0, 2, 3, 5, 8, 10, 15, 17, 24, 26, ?
விடை: 35
விளக்கம்:
இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்களின் முறை முதலில் 2 ஆல் கூட்டப்பட்டு அதிலிருந்து வரும் விடை முதல் ஒற்றைப்படை எண்ணால் கூட்டப்படும். கிடைக்கும் விடையானது மறுபடியும் 2 ஆல் கூட்டப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் விடையானது அடுத்த ஒற்றைப்படை எண்ணால் கூட்டப்படும். அதாவது,
0 + 2 = 2 ; 2 + 1 = 3
3 + 2 = 5 ; 5 + 3 = 8
8 + 2 = 10 ; 10 + 5 = 15
15 + 2 = 17 ; 17 + 7 = 24
24 + 2 = 26 ; 26 + 9 = 35
எனவே விடுபட்ட எண் 35 ஆகும்.

5. 563, 647, 479, 815, ?
விடை: 143
விளக்கம்:
எண்கள் தொகுப்பின் முறையானது கீழே விளக்கப்பட்டுள்ளது.
+84, -(84 * 2), +(84 * 4), -(84 * 8)
அதாவது,
563 + 84 = 647,
647 – (84 * 2) = 479,
479 + (84 * 4) = 815,
எனவே, 815 – (84 * 8) = 143
விடுபட்ட எண் 143 ஆகும்.

No comments:

Post a Comment