Wednesday, April 29, 2015

பொது அறிவு


1. காற்றின் திசைவேகம் காணப் பயன்படுவது - அனிமோ மீட்டர்

2. வளிமண்டல அழுத்தம் காணப் பயன்படுவது - பாரோ மீட்டர்

3. ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோஸ்கோப்

4. மாலிமிகள் திசையை அறியப் பயன்படுவது - காம்பஸ்

5. தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும், தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலிபிரிண்டர்

6. எதிரில் வரும் விமானத்தை அறியப் பயன்படுவது - ரேடார்

7. இதயதுடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காணப் பயன்படுவது - ஸ்டெதஸ்கோப்

8. நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்கப் பயன்படுவது - மைக்ரோஸ்கோப்

9. தூரத்திலுள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படுவது - டெலஸ்கோப்

10. காந்தப் புலங்களை அறியப் பயன்படுவது - மாக்னடோ மீட்டர்

11. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்கப் பயன்படுவது - குரோனோமீட்டர்

12. மனித உடலின் உள் உறுப்புகளைக் காணப் பயன்படுவது - எண்டோஸ்கோப்

13. கடல் மட்டத்திலிருந்து உயரம் காணப் பயன்படுவது - ஆல்டி மீட்டர்

14. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறியப் பயன்படுவது - ஹிமோசைட்டோ மீட்டர்


15. மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறியப் பயன்படுவது - பைரோ மீட்டர்

No comments:

Post a Comment