Monday, April 6, 2015

SI - தேர்விற்கான வினா - விடை - உளவியல்

1. கீழ்காணும் தொகுப்பில் உள்ளவற்றில் வித்தியாசமாக உள்ளது எது?
மேஷம், மீனம், வைரஸ், கும்பம்
விடை: வைரஸ்
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள மேஷம், மீனம், கும்பம் அனைத்தும் ராசிகளாகும் ஆனால் வைரஸ் என்பது நோய்க்கிருமி ஆகும்.

2. கீழ்காணும் ERYTHROBLAST என்கிற வார்தையிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு உருவாக்க முடியாத சொல் எது?
BLAST, BLAME, THEORY, ROAST
விடை: BLAME
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள ERYTHROBLAST என்கிற வார்தையிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு BLAST, THEORY, ROAST ஆகிய சொற்களை உருவாக்கலாம். ஆனால் BLAME என்ற சொல்லை உருவாக்க முடியாது ஏனெனில் M என்ற எழுத்து ERYTHROBLAST என்ற வார்தையில் இல்லை.

3. வினா குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எழுத்து-எண் கோர்வை எது?
P3, ?, J9, G12, D15
விடை: M6
விளக்கம்:
இங்கே ஆங்கில எழுத்து வரிசையில் J என்ற எழுத்துக்கு 3 எழுத்து முன் வரும் எழுத்து G ஆகும். அதைப் போல G என்ற எழுத்துக்கு 3 எழுத்து முன் வரும் எழுத்து D ஆகும்.
ஆக P என்ற எழுத்துக்கு 3 எழுத்து முன் வரும் எழுத்து M.
எண்கள் வரிசையில் ஒவ்வொரு எண்ணும் 3 ஆல் கூட்டப்பட்டு வந்துள்ளது.
9 + 3 = 12
12 + 3 = 15
எனவே, 3 + 3 = 6
குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எழுத்து-எண் கோர்வை M6.

4. சரியான விடையை எழுதவும்.
Paper : Pen : : Blackboard ?
விடை: Chalk
விளக்கம்:
Paper இல் Pen ஐ கொண்டு எழுத வேண்டும். அது போல Blackboard இல் Chalk ஐ கொண்டு எழுத வேண்டும்.

5. POUND என்ற சொல்லை MLRKA எனற குறியீடுகளால் குறித்தால், ENGLISH என்ற சொல் எவ்வாறு குறிக்கப்படும்?
விடை: BKDIFPE
விளக்கம்:
இங்கு ஒவ்வொரு எழுத்துக்களும் ஆங்கில அகவரிசைப்படி மூன்று எழுத்துக்கள் முன்னே சென்றுள்ளது.
அதாவது PàM, OàL, UàR, NàK, DàA
அவ்வண்ணம் EàB, NàK, GàD, LàI, IàF, SàP, HàE
ENGLISH என்ற சொல்லின் குறியீடு BKDIFPE.


No comments:

Post a Comment