Friday, April 10, 2015

SI - தேர்விற்கான வினா - விடை உளவியல்

1. A என்பவர் Bயிடம், ஒரு நபரை காட்டி, அவன் என்னுடைய மகளுடைய அப்பாவின் ஒரே மகன் என்றார். எனில் அந்த நபர் Aக்கு என்ன உறவு?
விடை: மகன்
விளக்கம்:
இங்கு
என்னுடைய மகளுடைய அப்பாவின் ஒரே மகன் என்பது அவருடைய மகனையே குறிக்கும்.

2. ராகுல் ஆனந்திடம் நேற்று நான் என்னுடைய பாட்டியின் மகளுடைய ஒரே தம்பியை பார்த்தேன் என்றார். எனில் அந்த நபர் ராகுலுக்கு என்ன உறவு? 
விடை: மாமா
விளக்கம்:
இங்கு
என்னுடைய பாட்டியின் மகளுடைய ஒரே தம்பி என்பது ராகுலின் அம்மாவின் தம்பி.
எனவே, ராகுலுக்கு அந்த குறிப்பிட்ட நபர் மாமா ஆவார்.

3. B-யினுடைய அம்மா A. A-யினுடைய மகன் C. E-னுடைய சகோதரர் D. B-னுடைய மகள் E. D-னுடைய பாட்டி யார்?
விடை: A
விளக்கம்:
குறிப்புகளிலிருந்து நாம் அறியும் முடிவுகள் இதோ,
A-இன் பிள்ளைகள் B மற்றும் C.
B-இன் பிள்ளைகள் E மற்றும் D.
எனவே, D-இன் பாட்டி A ஆவார்.

4. ராஜ் என்பவர் ஒரு போட்டோவைக் காட்டி, எனக்கு சகோதரர், சகோதரிகள் யாரும் இல்லை, ஆனால் இந்த போட்டோவில் இருப்பவருடைய அப்பா என்னுடைய அப்பாவின் மகன் எனில் போட்டோவில் இருப்பவர் யார்?
விடை: ராஜ் என்பவரின் மகன்
விளக்கம்:
இங்கு கூர்ந்து யோசித்தால்,
போட்டோவில் இருப்பவருடைய அப்பா என்னுடைய அப்பாவின் மகன் என்பது அவரது மகனையே குறிக்கும்.
எனவே, போட்டோவில் இருப்பவர் ராஜ் என்பவரின் மகன் ஆகும்.

5. தீபக் என்பவர் ரவியின் அண்ணன். ரேகா என்பவர் கவிதாவின் தங்கை. ரவி ரேகாவின் மகன் எனில் தீபக் என்பவர் ரேகாவுக்கு என்ன உறவு?
விடை: மகன்
விளக்கம்:
இங்கு தீபக் ரவி இருவரும் அண்ணன் தம்பி எனவும் ரவி என்பவர் ரேகாவின் மகன் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ரேகாவுக்கு இரண்டு மகன்கள் தீபக் மற்றும் ரவி. ஆக
தீபக் என்பவர் ரேகாவுக்கு மகன் ஆவார்.








No comments:

Post a Comment