Monday, April 13, 2015

SI - தேர்விற்கான வினா - விடை - உளவியல்

1. 2 ரூபாய் 70 பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம்?
விடை: 5 5/9%
விளக்கம்:
2 ரூபாய் 70 பைசா = (2 * 100 பைசா + 70 பைசா)
= 200 பைசா + 70 பைசா
= 270 பைசா
எனவே, தேவையான சதவீதம் = (15/270) * 100
= 50/9 = 5 5/9%
எனவே, தேவையான சதவீதம் = 5 5/9%

2. ஒரு பொம்மையின் குறித்த விலை ரூ. 1200 கடைக்காரர் 15% தள்ளுபடி விலையில் கொடுத்தார் எனில், பொம்மையின் விற்பனை விலை என்ன?
விடை: ரூ. 1020
விளக்கம்:
பொம்மையின் குறித்த விலை = ரூ. 1200
தள்ளுபடி வீதம் = 15%
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி தொகை
தள்ளுபடி தொகை = (15/100) * 1200 = 180
விற்பனை விலை = 1200 – 180
= ரூ. 1020

3. A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 1500 யை ஈட்டினால் அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?
விடை: A இன் பங்கு = ரூ. 900, B இன் பங்கு = ரூ. 600
விளக்கம்:
A ஒரு நாளில் செய்யும் வேலை = 1/10 பாகம்
B ஒரு நாளில் செய்யும் வேலை = 1/15 பாகம்
எனவே, அவர்களின் வேலைத்திறன்களின் விகிதம் = 1/10 : 1/15
= 3 : 2
மொத்தத் தொகை = ரூ. 1500
A இன் பங்கு = (3/5) * 1500 = 900
B இன் பங்கு = (2/5) * 1500 = 600

4. 9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் சராசரி 8 எனில் x-ன் மதிப்பு காண்க.
விடை: 13
விளக்கம்:
சராசரி = மொத்த எண்களின் கூடுதல் / மொத்த எண்களின் எண்ணிக்கை
8 = (9 + 6 + 7 + 8 + 5 + x) / 6
8 = (35 + x) / 6
X = 48 – 35
X = 13

5. ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர் எடுத்த ஒட்டங்கள் பின்வருமாறு 13, 28, 61, 70, 4, 11, 33, 0, 71, 92 இவற்றின் இடைநிலை காண்க.
விடை: 30.5
விளக்கம்:
ஒட்டங்கள் ஏறுவரிசையில் அமைபோம்.
0, 4, 11, 13, 28, 33, 61, 70, 71, 92
இங்கு n = 10
இங்கு இரு மத்திய மதிப்புகள் உள்ளன. அவை 28, 33 ஆகும்.
இடைநிலை = (28 + 33) / 2
= 61 / 2 = 30.5






No comments:

Post a Comment