Tuesday, April 7, 2015

SI - தேர்விற்கான வினா - விடை - உளவியல்

ஆறு நண்பர்கள் P, Q, R, S, T, U ஆகியோர் ஒரு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு விளையாட்டுகளை விளையாடுவார்கள். அவை கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், கூடைப்பந்து, பூப்பந்து மற்றும் கைப்பந்து.
T என்பவர் P மற்றும் S-ஐ விட உயரமானவர். அவர் டென்னிஸ் விளையாடுகிறார். நண்பர்களுள் உயரமானவர் கூடைப்பந்து விளையாடுவார். நண்பர்களுள் குள்ளமாக இருப்பவர் கைப்பந்து விளையாடுவார். Q மற்றும் S என்பவர்கள் கைப்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளை விளையாடமாட்டார்கள்.
R என்பவர் கைப்பந்து விளையாடுகிறார். உயரத்தின் அடிப்படையில் T என்பவர் Q  மற்றும் P-யின் இடையில் இருக்கிறார். இங்கு Q கால்பந்து விளையாடுபவர்.

1. நண்பர்களுள் R - ஐ விட உயரமானவரும் P – ஐ விட குள்ளமானவரும் யார்?
அ) Q
ஆ) T
இ) U                                                                              
ஈ) S
விடை: ஈ) S

2. உயரத்தின்படி இறங்குவரிசையில் ஆறு பேரும் நின்றால், அப்போது அந்த வரிசையில் மூன்றாவது உயரமானவர் யார்?
அ) Q
ஆ) P
இ) T
ஈ) S
விடை: இ) T

3. பின்வருவனவற்றுள் எது உண்மையில்லை.
அ) P என்பவர் R – ஐ விட குள்ளம்
ஆ) Q என்பவர் S – ஐ விட உயரம்
இ) S என்பவர் R – ஐ விட உயரம்
ஈ) T என்பவர் R – ஐ விட உயரம்
விடை: அ) P என்பவர் R – ஐ விட குள்ளம்

4. நண்பர்களுள் கூடைப்பந்து விளையாடுபவர் யார்?
அ) Q
ஆ) U
இ) R
ஈ) S
விடை: ஆ) U

5. S என்பவர் என்ன விளையாடுகிறார்?
அ) கிரிக்கெட்
ஆ) பூப்பந்து
இ) கால்பந்து
ஈ) கிரிக்கெட் அல்லது பூப்பந்து
விடை: ஈ) கிரிக்கெட் அல்லது பூப்பந்து


குறிப்பு:
உயரத்தின் அடிப்படையில் நாம் அறியப்படுவது,
T > P, T > S, Q > T > P.
R கைப்பந்து விளையாடுகிறார், எனவே நண்பர்களுள் குள்ளமானவர் R ஆவார்.
Q என்பவர் கைப்பந்து, கூடைப்பந்து விளையாடவில்லை. எனவே Q என்பவர் நண்பர்களுள் உயரமானவர் இல்லை.
ஆக U என்பவரே ஆறு பேரில் உயரமானவர்.
எனவே, நாம் அறியும் நண்பர்களின் உயர இறங்கு வரிசை இதோ,
U > Q > T > P > S > R
இங்கு, T டென்னிஸ் விளையாடுகிறார்.
உயரமானவரான U கூடைப்பந்து விளையாடுகிறார்.
R கைப்பந்து விளையாடுகிறார்.
Q கால்ப்பந்து விளையாடுகிறார்.
P மற்றும் S கிரிக்கெட் அல்லது பூப்பந்து விளையாடுவார்கள்.




No comments:

Post a Comment