Wednesday, April 8, 2015

SI - தேர்விற்கான வினா - விடை உளவியல்

1. 2 மணி 30 நிமிடங்கள் 15 விநாடிகள் என்பதை விநாடிகளாக மாற்றுக.
விடை: 9015 விநாடிகள்
விளக்கம்:
1 மணி = 3600 விநாடிகள்
எனவே, 2 மணி = 2 * 3600 = 7200 விநாடிகள்
1 நிமிடம் = 60 விநாடிகள்
எனவே, 30 நிமிடம் = 30 * 60 = 1800 விநாடிகள்
2 மணி 30 நிமிடங்கள் 15 விநாடிகள் = 7200 + 1800 + 15
= 9015 விநாடிகள்

2. ஒரு குழந்தைக்கு 200 மி.லி பால் வீதம், 40 குழந்தைகள் கொண்ட வகுப்பில் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் தர வேண்டுமென்றால் எத்தனை லிட்டர் பால் வாங்க வேண்டும்.
விடை: 8 லிட்டர்
விளக்கம்:
ஒரு குழந்தைக்கு 200 மி.லி
40 குழந்தைகளுக்கு 40 * 200 = 8000 மி.லி
அதாவது 8 லிட்டர் பால் தேவை.

3. சோபனா என்பவர் 2 மணி நேரத்தில் 35 கி.மீ தூரம் கடக்கிறார் எனில், அதே வேகத்தில் சென்றால் 6 மணி நேரத்தில் எவ்வளவு தூரம் கடந்து இருப்பார்?
விடை: 105 கி.மீ    
விளக்கம்:
காலம் அதிகரிக்கும் போது, கடந்த தூரமும் அதிகரிக்கும்.
எனவே, இது நேர்விகிதத்தில் அமையும்.
ஃ 2 : 6 = 35 : ?
விடுபட்ட எண் = (6 * 35)/2 = 105
எனவே, 6 மணிநேரத்தில் சோபனா கடந்த தூரம் = 105 கி.மீ.

4. 2010-இல், ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,50,000. அடுத்த ஆண்டில், அது 10% அதிகரிக்குமானால், 2011ல் மக்கள் தொகையைக் காண்க.
விடை: 1,65,000
விளக்கம்:
2010 – ல் மக்கள் தொகை = 1,50,000
அதிகரிக்கும் மக்கள் தொகை = (10/100) * 1,50,000
= 15,000
2011 – ல் மக்கள் தொகை = 150000 + 15000
= 1,65,000

5. 80 மீ நீளம் உடைய செவ்வக வடிவத் தோட்டத்தின் பரப்பளவு 3200 ச.மீ. தோட்டத்தின் அகலத்தைக் காண்க.
விடை: 40 மீ.
விளக்கம்:
நீளம் = 80 மீ, பரப்பளவு = 3200 ச.மீ எனத்தரப்பட்டுள்ளது.
செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் * அகலம்
அகலம் = செவ்வகத்தின் பரப்பளவு / நீளம்
= (3200 / 80) = 40 மீ.

ஃ தோட்டத்தின் அகலம் = 40 மீ.

No comments:

Post a Comment