Monday, March 2, 2015

பொது அறிவு

1)   இந்தியாவில் புதிதாக ஒரு மாநிலத்தை உருவாக்கிட திருத்தம் செய்யும் அரசியல் நிர்ணய சட்டத்தின் அட்டவணை எது - முதலாம் அட்டவணை
2)   போஸ்டல் இண்டக்ஸ் எண் எனப்படும் பின்கோடு முறை எப்போது தொடங்கப்பட்டது -  15.8.1972
3)   குருதேவ் என அழைக்கப்பட்டவர் யார் - ரவீந்திரநாத் தாகூர் 
4)   பெரிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருது எது - மகாரத்னா
5)   தெலங்கானா தனிமாநிலம் அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவின் தலைவர் யார் - ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா
6)   அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பின் மனசாட்சி என வர்ணித்தவர் யார் - ஜவஹர்லால் நேரு
7)   சேர்வலாறு அணைக்கட்டு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது - திருநெல்வேலி மாவட்டம்
8)   இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது - கிளை வங்கி முறை
9)   அப்பள தயாரிப்புக்கு பெயர்பெற்ற இடம் எது - கல்லிடைக்குறிச்சி
10) தமிழ்நாட்டின் சர் வால்டர் ஸ்காட் என அழைக்கப்பட்டவர் யார் - கல்கி
11) இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எங்குள்ளது - ராமேசுவரம் கோவில், 14,000 அடி
12) காடுகளின் பச்சைத்தங்கம் என அழைக்கப்படுவது எது - மூங்கில்
13) “World of All Human Rights” என்ற நூலை எழுதியவர் யார் - சோலி சொராப்ஜி
14) முதல்முதலாக உருவாக்கப்பட்டுள்ள மாசுகட்டுப்பாட்டு போர்க்கப்பலின் பெயர் என்ன - சமுத்ரா பிரகான்
15) தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது - பெங்களூரு
16) தமிழ்நாட்டின் 31-வது மாவட்டம் எது - அரியலூர்
17) பம்பாய் என்ற பெயர் எப்போது மும்பை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது - 1995-ம் ஆண்டு
18) மெட்ராஸ் எப்போது சென்னை ஆனது - 1996-ம் ஆண்டு
19) சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள் எது - வியாழன்

20) ஒரு காரட் எடையுள்ள தங்கம் எத்தனை மில்லி கிராம் - 200 மில்லி கிராம்

No comments:

Post a Comment