Thursday, March 26, 2015

SI - தேர்விற்கான வினா - விடை உளவியல்

1. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் பொருந்தாத ஒன்றை கண்டுபிடி?
 A) FRSTM
 B) LVKRS
C) WPQSK
D) UIEAO
விடை: UIEAO
விளக்கம்:
D மட்டுமே ஆங்கில உயிர் எழுத்துக்களால் ஆனது.
A, E, I, O, U
மற்ற அனைத்து தொடர்களும் ஆங்கில மெய் எழுத்துக்களால் ஆனது.

2. GOD : HPE ; MAN : ?
விடை: NBO
விளக்கம்:
GOD என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களின் அடுத்த எழுத்துக்கள் விடையாக எழுதப்பட்டுள்ளது.
G -->H, O-->P, D-->E
அதுபோலவே MAN என்ற சொல்லில் ஒவ்வொரு எழுத்துக்கும் அடுத்த எழுத்து விடையாக அமைய வேண்டும்.
M ---->N, A->B, N-->O

3. ABC என்பது ZYX என்று மாறினால் DEF என்பது எப்படி மாறும்?
விடை: WVU
விளக்கம்:
முதல் எழுத்து கடைசி எழுத்தான Z உடன் இணைக்கப்படுகிறது. இரண்டாம் எழுத்து கடைசி எழுத்துக்கு முந்தைய எழுத்தான Y உடன் இணைக்கப்படுகிறது. இவ்வாறு Aயிலிருந்து முன்னோக்கி நகர்ந்து Zலிருந்து தொடர்பு எழுத்துக்கள் பின்னோக்கி நகர்கின்றன.
அதாவது A, B, C, D, E, F-->Z, Y, X, W, V, U

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு சொற்களில் எந்த ஒன்று மற்ற சொற்களில் இருந்து மாறுபட்டது?
பெரம்பலூர், திருப்பூர், கடலூர், ஈரோடு.
விடை: கடலூர்
விளக்கம்:
கொடுக்கப்பட்ட தொகுப்பில் கடலூர் மட்டும் கடற்கரையோர மாவட்டம்.

5. P என்பவர் Q வின் தம்பி, ஆனால் Q என்பவர் P ன் அண்ணன் இல்லை, எனில் Q P-க்கு என்ன உறவு?
விடை: அக்காள்
விளக்கம்:
Qவின் தம்பி P. ஆனால் அண்ணன் இல்லை.
எனவே, அக்காவாகத்தான் இருக்க முடியும்.

No comments:

Post a Comment