Saturday, March 7, 2015

பொது அறிவு

1)   மகாத்மா காந்தியை தேசத்தந்தை என அழைத்தவர் யார் - சுபாஷ் சந்திரபோஸ்
2)   இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றி தற்போது மத்திய அமைச்சராக இருப்பவர் யார் - வி.கே.சிங்
3)   பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி யார் - மம்நூன் ஹூசேன்
4)   தற்போதைய போப்பாண்டவர் பிரான்சிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - அர்ஜெண்டினா
5)   17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது - தென்கொரியா
6)   இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி எது -  வாகா
7)   ஈராக் நாட்டின் தலைநகரம் எது - பாக்தாத்
8)   அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான நிதி உதவி திட்டத்தில் உதவி பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு எவ்வளவு - ரூ.72 ஆயிரம்
9)   யாகூ தேடுபொறி (Yahoo Search Engine) எந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது - 2004-ம் ஆண்டு
10) ஜனநாயகத்தின் முதல் தூண் என குறிப்பிடப்படுவது - சட்டமன்றம்
11) உலக புத்தக தினம் என்று கொண்டாடப்படுகிறது - ஏப்ரல் 23
12) சர்வதேச தண்ணீர் தினம் என்றைக்கு அனுசரிக்கப்படுகிறது - மார்ச் 22
13) ஆலிவர் ரிட்லி என அழைக்கப்படும் கடல் ஆமைகள் எந்த மாநிலத்தின் கடற்கரையில் காணப்படுகின்றன - ஒடிசா
14) தீபிகா பலிக்கல் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவர் - ஸ்குவாஷ்
15) இந்தியாவில் எந்த மாநிலத்தில் விளக்கு கப்பல் (Light Ship), அதாவது கலங்கரை விளக்கத்துக்குப் பதில் செயல்பட்டு வருகிறது - குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில்
16) சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது - மார்ச் 20
17) இந்திய புகையிலை வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது - குண்டூர்
18) தமிழ்நாட்டில் அரசு கல்லூரி முதல்வராக முதல்முதலாக கண் பார்வையற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யார்  - டாக்டர் பிரபு
19) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகப்பட்சமாக எத்தனை சின்னங்கள் இடம்பெற முடியும் - 16
20) 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது - இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா

No comments:

Post a Comment