Monday, March 30, 2015

பொது அறிவு - இயற்பியல்

1. கடலின் ஆழத்தை கண்டறிய உதவும் கருவி - சோனோ மீட்டர்
2. எக்ஸ் கதிர்கள், காமாக் கதிர்கள், ஆல்பா மற்றும் பீட்டா கதிர்கள் ஆனது ----------- வகை கதிர்வீச்சு - அயனி கதிர்வீச்சு
3. மின்னோட்டத்தை அளக்க உதவும் கருவி - அம்மீட்டர்
4. நீர் திவலைகள் கோள வடிவமாக இருக்கக் காரணம் - பரப்பு இழுவிசை
5. மீயொலி அலைகளின் அதிர்வு எண் - 20 KHZ-க்கு அதிகம்
6. ஒரு பொருளின் வேகம் இரட்டிப்பாகும்போது அதன் இயக்க ஆற்றல் - நான்கு மடங்காகும்
7. ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் செல்லும்போது அதன் வேக வளர்ச்சி - பூஜ்ஜியம்
8. டைனமோவின் தத்துவத்தை கண்டறிந்தவர் - மைக்கேல் ஃபாரடே
9. பனிக்கட்டியுடன் சாதாரண உப்பு கலக்கப்படும்போது அதன் உருகுநிலை - குறையும்
10. எந்த அலைக் கதிர்கள் அணுவில் அணுக்கரு மாற்றம் ஏற்படும்போது உற்பத்தியாகின்றன - காமா கதிர்கள்
11. ஒலி அதிவேகமாக செல்லக்கூடிய பொருள் - எஃகு
12. கெல்வின் அளவு முறையில் மனித உடம்பின் சராசரி வெப்ப நிலை - 310 கெல்வின்
13. 100 வாட் மின்சார விளக்கு ஒன்று, ஓர் அலகு மின்சார ஆற்றலை நுகர்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் - 10 மணி
14. ஜெர்மானியத்துடன் சிறிதளவு ஆன்டிமனியைச் சேர்த்தால் கிடைப்பது - n-வகை குறைக் கடத்தி

15. படிகங்களின் கோணங்களை அளவிடும் கருவி - கோனியோ மீட்டர்

No comments:

Post a Comment