Thursday, March 5, 2015

பொது அறிவு

1.   பிரசார் பாரதி எப்போது தோற்றுவிக்கப்பட்டது - 23.11.1997
2.   தாஜ்மஹால் எந்த ஆண்டு உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது - 1983-ம் ஆண்டு
3.   இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் இருந்தன - 26 மாவட்டங்கள்
4.   பாண்டவர்களின் பூமி என எந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது - தருமபுரி
5.   கரூர் எந்த ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது - 1995-ல்
6.   எமரால்டு அணைக்கட்டு எங்குள்ளது - சேலம் மாவட்டத்தில்
7.   தமிழ்நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது - சென்னை
8.   ஒரு மாவட்டத்தின் அனைத்து துறைகளுக்கும் உடனடி தலைவர் என யாரை குறிப்பிடுகிறோம் - மாவட்ட ஆட்சியர்
9.   Indian Rare Earths Ltd என்ற மத்திய அரசு நிறுவனம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது - கன்னியாகுமரி
10. நவதிருப்பதிகள் கொண்ட மாவட்டம் என எந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது - தூத்துக்குடி
11. பாம்பன் பாலம் எந்த மாவட்டத்தில் உள்ளது - ராமநாதபுரம்
12. திருமூர்த்தி நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது - கோவை மாவட்டம்
13. மண்டல் கமிஷன் எதற்காக அமைக்கப்பட்டது - பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு
14. தமிழ்நாட்டில் மேலவை (Legislative Council) எந்த ஆண்டு கலைக்கப்பட்டது - 1986-ல்
15. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற்றது - லண்டன்
16. 2014-ம் ஆண்டுக்கான உலக உணவு விருது பெற்ற வெளிநாடுவாழ் இந்தியர் யார் - சஞ்சய் ராஜாராம்
17. இந்திய-பாகிஸ்தான் எல்லையை நிர்ணயம் செய்தவர் யார் - சர் சிரில் ரெட்கிளிப்
18. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன - நரேந்திரநாத் தத்தா
19. மாப்ளா புரட்சி எங்கு எப்போது வெடித்தது - 1921-ல் கேரளாவில்

20. தேசபக்தர்களுக்கு எல்லாம் தேசபக்தர் என காந்தியடிகள் யாரை குறிப்பிட்டார் - சர்தார் வல்லபாய் படேல்

No comments:

Post a Comment