Saturday, February 28, 2015

பொது விண்ணப்பதாரர்களுக்குரிய SI - தேர்விற்கான வினா - விடை

1.   எவ்வகைக் கதிர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளையும், போலிப் பத்திரங்களையும் கண்டறிய உதவுகின்றன – புற ஊதா கதிர்கள்
2.   அழுத்த சமையற் கலனில் நீரின் கொதிநிலை யாது – 100 டிகிரி செல்சியஸை விட அதிகம்
3.   இரு நிறைகளுக்கு இடையே உள்ள தூரம் இருமடங்காக ஆக்கப்பட்டால் அவற்றிற்கு இடையே செயல்படும் புவி ஈர்ப்பு விசை என்னவாகும் – கால்பகுதியாக குறையும்
4.   சிரிப்பூட்டும் வாயு எது – நைட்ரஸ் ஆக்ஸைடு
5.   குளோரோபில்லில் காணும் தனிமம்    - மெக்னீசியம்
6.   புனித வரிவிதிப்பு விதிகளை உருவாக்கியவர் – ஆதம்ஸ்மித்
7.   ஒரு நிறுவனம் சமநிலை அடைவது எப்பொழுது எனில் – MC = MR
8.   இந்திய அரசால் வெளியிடப்படும் ஒரு ரூபாய் நோட்டுகள் ----------------------- என்று அழைக்கப்படும் – கட்டளைப் பணம்
9.   ஐந்தாண்டுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு – முந்தைய சோவியத் ரஷ்யா
10. முதலாம் 20 அம்ச திட்டத்தினை அறிவித்தவர் – திருமதி.இந்திராகாந்தி அம்மையார்
11. திட்டகமிஷன் தொடங்கப்பட்ட ஆண்டு – 1950 மார்ச்
12. வணிகம் எதனுடன் தொடர்புடையது – பொருட்களின் பரிமாற்றம்
13. இந்தியாவில் முதல் இரயில்வே தொடர்பு எந்த இரு நகரங்களுக்கிடையே ஏற்பட்டது – மும்பை – தானே
14. ஆறு மாத காலத்திற்கு மேலாக புழக்கத்திலுள்ள காசோலை எவ்வாறு அழைக்கப்படுகிறது – காலக்கெடு முடிந்த காசோலை
15. இருப்பு நிலை குறிப்பு என்பது – அறிக்கை
16. தேய்மானம் எனப்படுவது – சொத்து தேய்வடைவதால்
17. வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயாரிப்பவர் – வங்கி வாடிக்கையாளர்
18. மின் மாற்றி செயல்படுவது – AC யில் மட்டும்
19. அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப் பாதைக் கருத்தைக் கூறியவர் யார் – சாமர் பெல்டு

20. முதன்மை நிறங்கள் என்பவை – சிவப்பு, பச்சை, நீலம்

No comments:

Post a Comment