Wednesday, February 18, 2015

பொதுத்தமிழ்



1)      விமர்சனக்கலை எனும் நூலை எழுதியவர் - கநாசுப்ரமணியன்
2)      சோழர்களின் கொடிச்சின்னம் - புலி
3)      நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176
4)      பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தை பாடிய புலவர் - பெருங்குன்றூர்க்கிழார்
5)      பாலைக் கவுதமனார் பாடிய பதிற்றுப்பத்துப் பகுதி - மூன்றாம் பத்து
6)      அபிதான கோஷம் எனும் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் - முத்துத் தம்பிப்பிள்ளை
7)      பெரியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் - குடியரசு
8)      மந்திரமும் சடங்குகளும் எனும் நூலை எழுதியவர் - ஆசிவசுப்பிரமணியன்
9)      பண்பாட்டு அசைவுகள் எனும் நூலை எழுதியவர் - தொபரமசிவன்
10)  பாலைத் திணைக்குரிய புறத்திணை - வாகை
11)  உழிஞை எதற்குரிய புறத்திணை - மருதம்
12)  பொருநராற்றுப்படையின் ஆசிரியர் - முடத்தாமக் கண்ணியார்
13)  தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் - பாரதிதாசன்
14)  மரம், செடி, மின்விசிறி, நாற்காலி என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை- பொருட்பெயர்
15)  உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - இடப்பெயர்
16)  தண்டு, வேர், கண், காது, மூக்கு, கை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை- சினைப்பெயர்
17)  திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - காலப்பெயர்
18)  பச்சை இலை, சிவப்பு மை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - பண்புப்பெயர்
19)  கொலல், நந்தம், நீட்டம், பெருக்கல், ஒழுக்கு என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை- தொழிற்பெயர்
20)  தான் தெரிந்தவற்றை வேரு ஒருவரிடம் கேட்பது - அறிவினா

No comments:

Post a Comment