Friday, February 6, 2015

பொது அறிவு



1)   தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது - டெல்லி 
2)   கடலுக்குள் இருக்கும் பொருட்களை காண உதவும் கருவி எது - சோனார் 
3)   ஸ்டவ் திரியில் எண்ணெய் மேலேறக்காரணம் என்ன - தந்துகி கவர்ச்சி (நுண்துளை வழியே திரவம் தானாக மேலேறுதல்) 
4)   மின்கலங்களில் பயன்படுத்தப்படும் அமிலம் எது - கந்தக அமிலம்
5)   அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார் - ஆட்டோவான்
6)   கடலின் அடியிலிருந்து மேற்பரப்பில் உள்ள பொருட்களைக் காண பயன்படும் கருவி எது - பெரிஸ்கோப் 
7)   மின்இஸ்திரி பெட்டியில் உள்ள மின்வெப்ப இழை எது - நிக்ரோம்
8)   பென்சில் தயாரிக்கப் பயன்படும் பொருள் எது - கிராபைட்
9)   தண்ணீர் குழாய்கள் குளிர்காலத்தில் வெடிப்பது ஏன் - குளிரில் நீர் உறைந்து விரிவடைவதால்
10) தெர்மாஸ் குடுவையில் வெப்பக்கதிர் வீசலைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் எது - வெள்ளி
11) மின்விளக்கில் பயன்படுத்தப்படும் உலோகம் எது -  டங்ஸ்டன்
12) மத்திய சுரங்க ஆய்வு நிலையம் எங்குள்ளது - தன்பாத் (பிஹார்) 
13) கார் என்ஜினில் கார்பரேட்டரின் வேலை என்ன - காற்றுடன் பெட்ரோலை கலப்பது
14) விமானங்களின் வேகத்தைக் கணக்கிட பயன்படும் கருவி எது - டேகோ மீட்டர்
15) வாகனங்களில் என்ஜினைக் குளிர்விக்க உதவும் சாதனம் எது - ரேடியேட்டர்
16) கப்பல்களில் துல்லியமாக நேரத்தை கணக்கிட உதவும் கருவியின் பெயர் என்ன - குரோனோ மீட்டர்
17) வாகனங்களின் சக்கரத்துடன் இணைத்து வாகனம் எவ்வளவு தூரம் சுற்றியுள்ளது என்பதை கண்டறியும் கருவி எது - ஓடோமீட்டர்
18) யானை எந்த ஒலி மூலம் செய்தியை பரிமாறிக்கொள்கிறது - குற்றொலி
19) ஓசோன் படலம் குறையக் காரணமான வாயு எது - குளோரோ புளுரோ கார்பன் (CFC) 
20) அகச்சிவப்பு கதிர்களைக் கண்டறிந்தவர் யார் - சர் வில்லியம் ஹெர்ஷெல்

No comments:

Post a Comment