Friday, February 20, 2015

பொதுத்தமிழ்

            1. தமக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்வது - ஐய வினா
            2. ஒன்றினை மற்றவரிடம் கேட்டுப் பெறுதல் - கொளல் வினா
            3. ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்டல் - கொடை வினா
4. மறைமலையடிகளாரின் இயற்பெயர் என்ன -  சுவாமிவேதாசலம் 
5. ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ - இவ்வரி எவ்வியலில் இடம் பெற்றுள்ளது - தொல்காப்பியம் அகம்
6. அகத்திணைக்கே உரிய கோட்பாடு என்பது  - உள்ளுறை உவமம்
7. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய நூல் - ஐங்குறுநூறு
8. ‘நெஞ்சாற்றுப்படை’ எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது - முல்லைப்பாட்டு
9. ‘சூளாமணி’ நூல் அமைப்பு எப்பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது - சுருக்கம்
10. ‘மக்கள்’ என்பது ஒரு  - உயர்திணை பன்மை
11. ‘களவழி நாற்பது’ என்னும் நூலை இயற்றியவர் யார்  - பொய்கையார்
12. அணியிலக்கண நூல்களுள் முதன்மையானது  - தண்டியலங்காரம் 
13. புகழ்வது போலப் பழிப்பது எவ்வகை அணி - வஞ்சப்புகழ்ச்சி அணி
14. அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல்  - பரிபாடல்
15. வீரசோழியம் எந்தச் சமயத்தைச் சார்ந்த இலக்கண நூல் - பவுத்தம்
16. தொல்காப்பியர் எத்தனை வகையான உரைநடைகளைக் குறிப்பிடுகிறார் - நான்கு
17. இறைச்சி என்பது எதனின் ஒரு பகுதியைக் குறிப்பது - கருப்பொருள்
18. பிரித்து எழுதுக: வையந்தழைக்கும் - வையம் + தழைக்கும்
19. பலுச்சிஸ்தானத்தில் பேசப்படும் திராவிட மொழி எது – பிராகுயி
20. அகத்திணைகளின் எண்ணிக்கை யாவை - ஏழு

No comments:

Post a Comment