Monday, February 9, 2015

பொது அறிவு


1)   தமிழ்நாட்டில் எத்தனை லோக்சபா தொகுதிகள் உள்ளன - 39
2)   தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வுசெய்யப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எத்தனை - 18
3)   மாநிலங்களில் ஆட்சியைக் கலைக்க வகைசெய்யும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது - 356 சட்டப்பிரிவு
4)   தற்போதைய மக்களவை (16-வது மக்களவை) சபாநாயகர் யார் - சுமித்ரா மகாஜன்
5)   இந்திய அரசியலமைப்பின்படி மைய பட்டியலில் (Central List) உள்ள துறைகள் எத்தனை - 97
6)   மாநிலப் பட்டியலில் (State List) எத்தனை துறைகள் உள்ளன - 66
7)   பொதுப்பட்டியலில் (Concurrent List) உள்ள துறைகள் எத்தனை - 47
8)   மாநில ஆளுநர்களை நியமிப்பவர் யார் - குடியரசுத்தலைவர்

9)   மாநில ஆளுநரை எந்தவித காரணமும் குறிப்பிடாமல் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் பெற்றவர் யார் - குடியரசுத்தலைவர்
10) மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை (Advocate General) நியமிப்பவர் யார் - ஆளுநர்
11) டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பவர் யார் – ஆளுநர்
12) உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது என்ன - 62
13) உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எந்த தேர்தல் ஆணையம் - மாநில தேர்தல் ஆணையம்
14) நகர்பாலிகா சட்டம் என்பது எத்தனையாவது சட்டத்திருத்தம் - 74-வது சட்டத்திருத்தம்
15) மாநகர தந்தை, மாநகரின் முதல் குடிமகன் என அழைக்கப்படுவர் யார் - மேயர்
16) கிராம சபை ஆண்டுக்கு எத்தனைமுறை கூட வேண்டும் - 4 முறை
17) குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் எப்போது இயற்றப்பட்டது - 1984
18) உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் - ரிப்பன் பிரபு
19) கிராம ஊராட்சித் தலைவர் எந்த முறையில் தேர்வுசெய்யப்படுகிறார் - மக்களால் நேரடியாக
20) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆனது - 11 மாதங்கள், 17 நாட்கள்

No comments:

Post a Comment