Tuesday, February 10, 2015

பொது அறிவு


1)   மன்னர் மானிய ஒழிப்புக்கு வகை செய்த சட்டத்திருத்தம் எது - 26-வது சட்டத்திருத்தம்
2)   லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது எந்த சட்டத்திருத்தம் - 31-வது சட்டத்திருத்தம்
3)   குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அதிகாரம் எந்தப்பிரிவில் உள்ளது -  சட்டப்பிரிவு 143
4)   பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவானது எதற்குப் பிறகு சட்டமாகிறது - குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததும்
5)   குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறைந்தபட்சம் எத்தனை வயது இருக்க வேண்டும் -  35
6)   பாராளுமன்ற இரு அவைகளுக்கு இடையே எழும் முரண்பாடு எதன்மூலம் தீர்க்கப்படும் -  லோக்சபா சபாநாயகரின் நடவடிக்கை மூலம் 
7)   உயர்நீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை யாருக்கு அனுப்ப வேண்டும் - குடியரசுத்தலைவருக்கு
8)   உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது என்ன - 65
9)   இந்திய சுதந்திரச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது -  ஜூன் 1947
10) எந்த சட்டத்தின்படி இந்திய பிரிவினை செய்யப்பட்டது - இந்திய சுதந்திரச் சட்டம் 1947
11) இந்திய அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் எத்தனை - 299
12) இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது - நவம்பர் 26, 1949 
13) தேசிய தலைநகர் ஆட்சிப்பகுதியாக டெல்லி எந்த சட்டத்திருத்தம் மூலம் அறிவிக்கப்பட்டது -  69-வது சட்டத்திருத்தம்
14) இந்திய மாநிலங்கள் எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன - மக்கள் பேசும் மொழி அடிப்படையில் 
15) இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு எந்த வகையான குடியுரிமையை வழங்கியுள்ளது - ஒற்றைக்குடியுரிமை 
16) குடியுரிமைகளைப் பெறும் தகுதிகளைக் குறிக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது - 1955-ம் ஆண்டு சட்டம்
17) அரசியலமைப்பின் 12-வது விதி முதல் 35-வது விதி வரை குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எத்தனை - 6
18) நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமை என்ன - அடிப்படை உரிமைகள்
19) இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் எத்தனை - 11 
20) ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை - 250

No comments:

Post a Comment