Thursday, February 26, 2015

பொதுத்தமிழ்



1)      பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
2)      நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்
3)      சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
4)      வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்
5)      தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
6)      புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
7)      ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
8)      சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து
9)      தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்
10)  இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
11)  தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை - சமதக்கினி
12)  தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர் - தெய்வச்சிலையார்
13)  தொல்காபிய உரைவளத் தொகுப்பு - ஆசிவலிங்கனார்
14)  தொன்னூல் விளக்கம் ஆசிரியர் - வீரமாமுனிவர்
15)  தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு
16)  நண்டும் தும்பியும் நான்கறி வினாவே எனும் நூல் - தொல்காப்பியம்
17)  நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் - அகநானூறு
18)  நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் - கோபால கிருஷ்ணபாரதியார்
19)  நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு - கிபி880
20)  நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அருஇராம நாதன்
21)  நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் - நந்திக்கலம்பகம்

No comments:

Post a Comment