Thursday, February 5, 2015

பொதுத்தமிழ்



1. அரண்மனையைச் சேர்ந்த நாடக அரங்கினை எவ்வாறு அழைக்கலாம் -  நாயகப்பத்தி
2. மண்டல புருடர் இயற்றிய ஸ்ரீபுராணம் என்பது - மணிப்பிரவாள நடை
3. சங்கரதாஸ் சுவாமிகள் எம்மாவட்டத்தைச் சார்ந்தவர் - திருநெல்வேலி
4. அத்துவானம் என்பது - ஆள் இல்லாத பகுதி
5. வாக்கியத்தில் ஒரு எழுவாய் ஒரு பயனிலை பெற்று வந்தால் அது - தனிவாக்கியம்
6. பட்டினப்பாலையில் பாட்டுடைத் தலைவன் - கரிகாலன்
7. மறக்குடி மகளிரின் மறப்பண்பைப் பாராட்டுவதென்பது - மூதில் முல்லை
8. தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதியவர் யார் - பனம்பாரனர்
9. அகப்பொருள் விளக்கம் நூலை இயற்றியவர் யார் - நாற்கவிராசநம்பி
10. மெய்ப்பாடுகளின் வரிசையில் நான்காவது இடம் பெறுவது -  மருட்கை
11. வினையே ஆடவர்க்கு உயிரே இடம் பெற்றுள்ள இலக்கியம் குறுந்தொகை
12.  யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது - அகநானூறு
13. திருமணத்துக்கு முந்தைய காதல் வாழ்க்கை - களவியல்
14. உள்ளுறை குறித்து தொல்காப்பியத்தில் எந்த இயல் விளக்குகிறது - பொருளியல்
15. ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை - அகவற்பா
16. பெரியபுராணத்தின் ஆசிரியர் யார் - சேக்கிழார்
17. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும் குமரி என்றழைக்கப்படும் மூலிகை எது - சோற்றுக்கற்றாழை
18. மருந்துப் பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
19. தில்லையாடி வள்ளியம்மை கலந்து கொண்ட போராட்டம் - தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர் அறப்போராட்டம்
20. ஆதரவற்றவர்களுக்காக அவ்வை இல்லத்தை ஆரம்பித்தவர் யார் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

No comments:

Post a Comment