Monday, February 9, 2015

பொதுத்தமிழ்


1) தன் கல்லறையில்தமிழ் மாணவன் என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார் - ஜி.யு.போப்
2) திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் - ஜி.யு.போப்
3) வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - இத்தாலி
4) சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் - .வே.சு. ஐயர்
5) தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்
6) நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது - கோண்
7) தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் - இராமாமிர்தம் அம்மையார்
8) கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது - தொல்காப்பியம்
9) ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர் - புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள்
10) சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்
11) ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது - வடலூர்
12) சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி
13) பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல் - திருவாசகம்
14) பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார் - சுதேசமித்ரன்
15) தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார் - நாமக்கல் கவிஞர்
16)மோ என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன -  முகர்தல்
17) சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார் - திருத்தக்கதேவர்
18) பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல் எது - பிள்ளைத் தமிழ்
19) தொண்டர் சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் யார் -  சேக்கிழார்
20) அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்

No comments:

Post a Comment