Friday, February 6, 2015

பொதுத்தமிழ்



1)   யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது - அகநானூறு
2)   எகிப்து நாட்டுடன் நடந்த வாணிபத்தில் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் - மயில்தோகை மற்றும் அகில்
3)   மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர் - பேரறிஞர் அண்ணா
4)   அறிவியல் தொழில்நுட்பங்களை தனது சிறுகதையில் புகுத்தியவர் – சுஜாதா
5)      பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
6)      நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்
7)      சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி
8)      சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
9)      தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
10)   புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
11)   தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர்- தேவநேயப் பாவாணர்
12)   இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
13)   இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்
14)   அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன்
15)   தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்
16)   சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்
17)   காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
18)   காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை
19)   வைர வியாபாரி இடம்பெறும் நூல் - வளையாபதி
20)   வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்

No comments:

Post a Comment